முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக வசனம்.. சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் கைகுலுக்கிய ரஜினி!! வெளியான ஹாட் நியூஸ்!!

Photo of author

By Janani

முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக வசனம்.. சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் கைகுலுக்கிய ரஜினி!! வெளியான ஹாட் நியூஸ்!!

தமிழ்நாட்டில் 1992-ஆம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைத் தேடி தந்த படம் அண்ணாமலை,ரஜினி அவர்களுக்கு நல்ல புகழை பெற்று தந்தது.இந்த படத்தை முதலில் இயக்குனர் வசந்த் எடுப்பதாக இருந்தது,ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் விலகி விட்டார்.பின் திரைப்படம் சுரேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்பட்டது,அதில் நாயகியாக குஷ்பு அவர்கள் நடித்து இருப்பார்கள்,அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வசனமும் அற்புதமாக இருக்கும்.

இதில் ரஜினியும்,சரத் பாபுவும் முதலில் பாசமிகு நண்பர்களாக இருப்பார்கள்,அதன் பின் இருவரும் ஏழை,பணக்காரர் என்கிற வகையில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரியும் நிலை உருவாகும்.பிறகு ரஜினி புதிய தொழிலதிபராக மாறி பேசும் வசனம் பரபரப்பாக பேசப்பட்டது.ஏனெனில் அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தான்,அந்த வசனங்கள் எழுதப்பட்டது என பல விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் அந்த வசனத்தை புகழ் பெற்ற இயக்குனர் கே.பாலச்சந்தர் எழுதினார் என்பது குறிப்படத்தக்க விஷயம்.படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற ரஜினி அன்று தமிழகத்தில் நிலவிய வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார்.மேலும் படத்தின் தயரிப்பாளர் R.M வீரப்பன் அதிமுகவின் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.அதுமட்டுமில்லாமல் 1996-ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.அந்த காரணத்தினாலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.