திரும்பிய பக்கமெல்லாம் மனித உடல்கள்!! பாப பிரசங்கத்தால் பலியான 40 குழந்தைகள்!!   

0
235
Human Bodies Are Everywhere!! ௪௦ Chillen Gillet Paya Baba's Bracing!!
Human Bodies Are Everywhere!! ௪௦ Chillen Gillet Paya Baba's Bracing!!

திரும்பிய பக்கமெல்லாம் மனித உடல்கள்!! பாப பிரசங்கத்தால் பலியான 40 குழந்தைகள்!!

உத்தர பிரதேச மாநில மருத்துவமனைகள் முழுவதும், திரும்பிய பக்கமெல்லாம் மனித சடலங்கள் நிரம்பி வழிகின்றன.காண்போரின் மனம் பதைபதைக்க வைக்கும் ஒரு அதிச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது.போலோ பாபா என்னும் சாமியாரின் ஆன்மிக சொற்பொழிவு உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸில் நகரில் நடைபெற்றது.அங்கு தான் இந்த கோர சம்பவம் அரேங்கேறியுள்ளது.

பாபாவின் பிரசங்கத்தை கேட்க அந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றுள்ளனர்.அப்பொழுது கூட்டம் முடிந்ததும், திடீரென மக்கள் சாமியாரின் காலடி மண்ணை எடுக்க முண்டியடித்து ஓடி உள்ளனர்.இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு
மக்கள் பல பேர் இறந்துள்ளானர்.ஏறத்தாழ 140-க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்தாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே 40 பேர் என்னும் தகவலும் கிடைக்க பெற்றுள்ளது.இன்னும் சிலர் கவலைக்கிடமான நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுள்ளனர்.மேலும் படுகாயமடைந்த மக்கள் பலருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.ஏனெனில் அங்குள்ள மருத்துவமனைகளில் போதுமான இடங்கள் குறைந்த அளவிலே இருப்பதால் நோயாளிகள் அனைவரும் சிகிச்சைக்காக வெளியிலேயே காத்து கொண்டியிருக்கின்றனர்.

இதனால் உத்தர பிரதேசத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மருத்தவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் பல ஹத்ராஸ் நகரை நோக்கி வந்துகொண்டு இருகின்றன.இந்த நிலையில் வழக்கறிஞர் கவுரவ் துவேதி இந்த சம்பவம் தொடர்பாக அலகபாத் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.மேலும் பிரதமர் மோடி அவர்கள் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Previous articleவிக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: ஒரு ஓட்டுக்கு வேஷ்டி சேலை.. கையும் களவுமாக சிக்கிய திமுக!!                 
Next articleஅன்று திமுக இன்று பாஜக.. நேரடி எதிர்ப்பை தெரிவித்த விஜய்!! EPS- வுடன் கூட்டணி வைக்க அடித்தளமிடும் தவெக!!