FLASH: முதல்வரின் அடுத்த அறிவிப்பு!! இனி இவர்களுக்கும் மாதம் ரூபாய் 1000!!
தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏ-வான திரு புகழேந்தி அவர்கள் இறந்ததையடுத்து அங்கு இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.அதனை தொடந்து தமிழத்தின் முன்னணி கட்சிகள் அனைவரும் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.
பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையிலான வாக்கினை பெறுவதற்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன.இவர்கள் இருவருமே திமுகவை பொது எதிரியாக பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் திமுக சார்பில் களம் காணும் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் பிரச்சார Video-வை வெளியிட்டு மக்களிடம் ஓட்டு கேட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் மகளிர் உரிமைத் தொகை பற்றி ஓர் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.அதாவது முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பெயரால் குடும்ப தலைவிகள் எல்லோருக்கும் மாதம் ரூபாய் 1,000 அவர்களது வங்கி கணக்கில் செல்லுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை ஒரு சில ரேஷன் அட்டைகளுக்கு மறுக்கப்பட்டது,ஏனெனில் ஒரு சில பெண்களின் கணவர்கள் அரசு வேலைகளில் பணியாற்றி வந்தனர்.
தற்பொழுது தமிழக அரசு இவர்களுக்கும் இப்பொழுது மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படும் என் தெரிவித்துள்ளது.மேலும் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புதிய ரேஷன் அட்டை வாங்கியவர்கள் என அனைவரும் இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர்.