முதுகலை நீட் எழுதுபவர்கள் கவனத்திற்கு!! தேர்வு குறித்து முக்கிய தகவல் வெளியீடு!!

0
236
Attention Masters NEET writers!! Important information release about exam!!
Attention Masters NEET writers!! Important information release about exam!!

முதுகலை நீட் எழுதுபவர்கள் கவனத்திற்கு!! தேர்வு குறித்து முக்கிய தகவல் வெளியீடு!!

இந்தியாவிலுள்ள மருத்துவப் படிப்பில், மாணவர்கள் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வினை எழுத வேண்டும்.அதில், அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றால் அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.அந்த வகையில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்ளுக்கு தனித்தனியாக நீட் exam நடத்தப்படுகிறது.

இளநிலை தேர்வர்களுக்கு நடைபெற்ற தகுதித் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.அதுமட்டுமில்லாமல் தேர்வு ஆரம்பிப்பதற்க்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுயிருந்தது.இதனால் மாணவர்ளுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.இந்த மதிப்பெண் விவகாரத்திலும் குளறுபடிகள் அரங்கேறின.

இவ்வாறு தொடர்ந்து ஏற்பட்ட, பிரச்சனைகளால் சிஎஸ்ஐஆர் தேர்வு மற்றும் முதுகலை நீட் தேர்வு ஆகியவை, அடுத்தடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன. முதுநிலை தேர்வுகளுக்கு மட்டுமே இரண்டு முறை தேதி மாற்றப்பட்டது.இனி எப்பொழுது தேர்வு நடக்கும் என்பது தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கான முதுகலை நீட்தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இரண்டு ஷிஃப்டுகளில் நடைபெறும் என தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

Previous articleபின்பகுதியில் அடிக்கடி பிப்பு ஏற்படுகிறதா? இதை செய்தால் இனி சொரிய வேண்டிய தேவையே இருக்காது!!
Next articleமக்களே உங்களுக்குத்தான்.. இனி வரும் நாட்களில் இந்த வங்கி செயல்படாது!! ரிசர்வ் வங்கி போட்ட திடீர் தடை!!