ஒரே பள்ளியில் அடுத்தடுத்த மாணவர்களை பாதிக்கும் மஞ்சள் காமாலை!! அச்சத்தில் பெற்றோர்!!
தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் ஒரு சிலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே வயலோகம் பகுதியில் இருக்கும் பள்ளியொன்றில் படிக்கும் மாணவர்கள் அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளது.இது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது.கடந்த 5 நாட்களில் 12 மாணவ மாணவிகளுக்கு இந்தத் தொற்று பரவியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,அதனால் கழிவுகள் குடிநீரில் கலந்து தற்பொழுது விஷமாக மாறியுள்ளது எனவும் மேலும் இதனை பருகியதால் தான் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த செய்தி அந்த ஊர் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் போரட்டத்தில் இறங்கியுள்ளனர்.ஏனெனில் இதேப் போன்ற சம்பவம் இப்பகுதியில் ஜூன் மாதம் நடந்தது.அப்போது இந்த கழிவு நீரை குடித்த இதே கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் நித்தீஸ்வரன் என்பவர் உயிரிழந்தார்.
அந்த துயரம் மறைவதற்குள் மீண்டும் மற்றொரு அசம்பாவிதம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்,அரசு ஏன் இப்படி அலட்சியமாக இருக்கிறது? மேலும் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்காது என பொது மக்கள் கூறி வருகின்றனர்.