முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? உருளைக் கிழங்கு ஒன்று போதும்!
நம்முடைய முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு பல வழிகள் இருந்தாலும் கிழங்கு வகைகளில் ஒன்றான உருளைக் கிழங்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
கிழங்கு வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்று. இந்த உருளைக் கிழங்கை பெரும்பாலும் மக்கள் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சிப்ஸ், பொறியல், குழம்பு போன்று உருளைக் கிழங்கை சமையலில் பல வகையாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு சமையலுக்கு பயன்படுத்தப்படும் உருளைக் கிழங்கை சருமத்திற்கு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான். இந்த உருளைக் கிழங்கு நம்முடைய உடலுக்குத் தேவையான பல சத்துக்களையும் சருமத்திற்கு தேவையான கருத்துக்களையும் கொண்டது. இந்த உருளைக் கிழங்குடன் ஒரு சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது சருமத்தை எளிமையாக பளபளப்பாக மாற்ற முடியும். அது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* தக்காளி
* உருளைக் கிழங்கு
* மஞ்சள் தூள்
தக்காளி, மஞ்சள் தூள் இரண்டு பொருட்களும் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது.இந்த இரண்டையும் உருளைக் கிழங்குடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது நம்முடைய சருமம் பளபளப்பாக மாறுகின்றது. அது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.
செய்முறை…
உருளைக் கிழங்கை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே போல தக்காளியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளவும். பின்னர் இறுதியாக மஞ்சள் தூள் சிறிதளவு போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்டை முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவி விடலாம். இதே போல தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.