ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! களமிறங்கும் அமலாக்கத்துறை! மிகப்பெரிய சிக்கலில் செல்வப்பெருந்தகை!
பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது காவல் துறையில் செல்வப்பெருந்தகை அவர்கள் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அண்ணாமலை அவர்கள் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை களமிறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
அண்ணாமலை அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியிருந்தார். இதற்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் பாஜக கட்சியில் நிறைய ரவுடிகள் இருக்கின்றனர் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக அண்ணாமலை அவர்கள் காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களே குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர்தான் என்று கூறியுள்ளார். அண்ணாமலை அவர்களின் இந்த பேச்சு செல்வப்பெருந்தகை அவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து அண்ணாமலை அவர்களின் இந்த பேச்சுக்கு செல்வப்பெருந்தகை அவர்கள் “என்னை ரவுடி என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறுகின்றார். ஆனால் அண்ணாமலை அவர்களால் எந்த காவல்நிலையத்தில் என் மீது வழக்குகள் இருக்கின்றது என்பதை நிரூபிக்க முடியுமா? என்னை அண்ணாமலை அவர்கள் மிகவும் அவதூறாக பேசியுள்ளார். இதற்கு அண்ணாமலை அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அண்ணாமலைக்கு நான் கடைசி எச்சரிக்கை தருகிறேன். மன்னிப்பு கேட்காவிட்டால் அண்ணாமலை மீது அவதூறு வழக்கும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழும் காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அண்ணாமலை அவர்களை சீண்டிய செல்வப்பெருந்தகை அவர்கள் மீது உள்ள வழக்குகள் குறித்த பட்டியலை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காலை முயற்சி வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, காலை மிரட்டல் வழக்கு, பயங்கர. ஆயுதங்களை வைத்து கலவரம் ஏற்படுத்திய வழக்கு என்று செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இந்த கொலை வழக்கு பட்டியலில் செல்வப்பெருந்தகை மீது கொலை மிரட்டல் வழக்கு மட்டும் மூன்று உள்ளது.
இதையடுத்து அண்ணாமலை அவர்கள் “ஆடிட்டர் பாண்டியன் காலை வழக்கிலும், குண்டாஸ் வழக்கிலும் செல்வப்பெருந்தகை அவர்கள் கைது செய்யப்பட்டதை அவரால் முழுக்க முடியுமா? அரசியல் கம்பங்களை பெறுவதற்கும் தன் மீது இருக்கும் குற்ற வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் செல்வப்பெருந்தகை அவர்கள் தன்னுடைய கொள்கையை விட்டுவிட்டு கொள்கைகளுக்கு நேரெதிர் கட்சியில் இணைந்துள்ளார். மேலும் செல்வப்பெருந்தகை அவர்கள் காந்திய வழியில் வந்தேன் என்று கூறுகின்றார். இவ்வாறு எல்லாம் செய்தால் அவர் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகுமா?” என்று அவர் கூறினார்.
அது மட்டுமில்லாமல் அண்ணாமலை அவர்கள் செல்வப்பெருந்தகை அவர்களை பற்றி “செல்வப்பெருந்தகை அவர்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் கடை நிலை ஊழியராக பணியாற்றியவர். கடைநிலை ஊழியராக பணியாற்றிய செல்வப்பெருந்தகை அவர்கள் லண்டனில் என்ன வாங்கி வைத்திருக்கிறார், அவருடைய மனைவியின் பெயரில் என்னென்ன சொத்துக்கள் இருக்கின்றது, ஆடிட்டர் பாண்டியன் அவர்கள் ஏன் கொலை செய்யப்பட்டார், ஆடிட்டர் பாண்டியன் அவர்கள் காலை செய்யப்பட்ட வழக்கில் எத்தனை பணம் கைமாறியது என்பது பற்றியெல்லாம் பேசுவோம் என்று. அண்ணாமலை கூறினார்.
அது மட்டுமில்லாமல் அண்ணாமலை அவர்கள் “காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் குற்றவாளிகளின் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தை மற்றும் நான் மாற்றிக்கொள்ளப் பொது இல்லை. அதுமட்டுமில்லாமல் நான் செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்க முடியாது. செல்வப்பெருந்தகை அவர்கள் என்மீது எங்கு வேண்டுமானாலும் என்ன வழக்கு வேண்டுமானாலும் தொடரட்டும். நான். செல்வப்பெருந்தகை அவர்களை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கின்றேன்” என்றும் கூறினார்.
இருவருக்கும் இடையே ஏற்படும் இந்த முதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் அண்ணாமலை அவர்களின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினிர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களின். உருவபொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்து அவர்களின். எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க செல்வப்பெருந்தகை அவர்கள் அண்ணாமலை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
செல்வப்பெருந்தகை அவர்கள் ஏற்கனவே அண்ணாமலை அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச்சரித்த நிலையில் அண்ணாமலை அவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்ததால் கபம் அடைந்த செல்வப்பெருந்தகை அவர்கள் அண்ணாமலை மீது புகார் அளித்திருப்பதாகவும் விரைவில் அண்ணாமலை அவர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது.
செய்யாத குற்றத்திற்கு மன்னிப்பு கேட்க மறுத்த அண்ணாமலை அவர்கள் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எதிராக பல அதிரடியான நடவடிக்கைகளை செய்யும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் செல்வப்பெருந்தகை அவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பான தகவல்களை திரட்டி அதை உள்துறை அமித்ஷா அவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
அதிலும் குறிப்பாக செல்வப்பெருந்தகை அவர்கள் லண்டனில் முதலீடு செய்திருப்பது குறித்தான குற்றத்தை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அண்ணாமலை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் செல்வப்பெருந்தகை அவர்களை அமலாக்கத்துறை கதை செய்யும் என்றும் கூறப்பட்டு வருகின்றது.
அண்ணாமலை அவர்களுக்கு எதிராக செல்வப்பெருந்தகை அவர்கள் தமிழக காவல்துறையை களமிறக்க நினைத்தார். ஆனால் அண்ணாமலை அவர்கள் அதற்கும் மேல் ஒரு படி சென்று செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையை களமிறக்க நேரடியாக அமித்ஷா அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று பாஜக கட்சியினர் கூறி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகைக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலால் மீண்டும் அமலாக்கத்துறை உள்ளே வரவுள்ளது.
இதே போலத்தான் அண்ணாமலை அவர்களுக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இறுதியில் அண்ணாமலை அவர்கள் அமலாக்கத்துறையை இறக்கியதை அடுத்து கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அவர்கள் இன்று வரையிலும் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்கின்றார். இதற்கு மத்தியில் அண்ணாமலை அவர்கள் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எதிராக தன்னுடைய கேமை ஸ்டார்ட் செய்துவிட்டார் என்று பாஜக கட்சியினர் கூறுகின்றனர். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.