உங்களுடைய முகம் பொலிவு பெற வேண்டுமா? பாலுடன் இதை கலந்து முகத்தில் தேய்த்தால் போதும்!
முகத்தை பொலிவு பெற வைக்க பாலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம்மில் பலருக்கும் பொதுவாக பெண்களுக்கு முகத்தின் மீது தனி கவனம் இருந்து கொண்டே தான் இருக்கும். முகத்தை பொலிவு பெற வைக்க வேண்டும் என்றும் பளபளப்பாக வைக்க வேண்டும் என்றும் தனியாக கவனம் செலுத்துவார்கள்.
குறிப்பாக முகத்தில் வரும் சருமப் பிரச்சனைகளுக்கு மட்டுமே தனியாக செலவு செய்யும் அளவிற்கு சருமத்தின் மீது தனி அக்கறை காட்டுவார்கள். அவர்கள் முகத்தை பொலிவு பெற வைக்க தனியாக பல கிரீம் வகைகளை வாங்கி முகத்தில் தேய்த்து முகம் பொலிவு பெறுகின்றதோ இல்லையோ முகத்தில் மேலும் சில சரும பிரச்சனைகளை வாங்கி வைத்து விடுவார்கள்.
அவ்வாறு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் செயற்கை பொருட்களை நம்பாமல் வீட்டிலேயே கிடைக்கும் சில பொருட்களை வைத்து இயற்கையான மருத்துவத்தில் செய்து விடலாம். அந்த வகையில் முகத்தை பொலிவு பெற வைக்க பாலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* பால்
* சந்தனம்
பால் மற்றும் சந்தனம் இரண்டுமே சருமத்திற்கு உகந்த பொருட்கள். பாலை மட்டும் எடுத்து முகத்தில் தேய்த்து வந்தாலே சருமப் பிரச்சனைகள் குணமாகும். அதே போல சந்தனமும் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது. இரண்டையும் எவ்வாறு பயன்படுத்தி முகத்தை பொலிவு பெற வைப்பது என்று தற்பொழுது பார்க்கலாம்.
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பவுலில் சந்தனத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் பால் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். சுமார் 10 நிமிடம் இதை முகத்தில் அப்படியே வைக்க வேண்டும். 10 நிமிடம் கழிந்து முகத்தை கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் பொழுது முகம் பொலிவு பெறும்.