ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! அலுவலகம் முன்பு 15000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்! 

Photo of author

By Sakthi

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! அலுவலகம் முன்பு 15000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்!
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் மும்பையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்திற்கு முன்பு 15000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஏர்போர்ட் சர்வீஸ் பணிக்கான 2216 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து இந்த வேலைக்கு விருப்பமும் தகுதியும் இருக்கும் நபர்கள் அனைவரும் மும்பையில் கலினா பகுதியில் இருக்கும் ஏர் இந்தியா அலுவலகத்திற்கு வருமாறும் ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பை அடுத்து நேற்று(ஜூலை16) முதலே பல இளைஞர்கள் ஏர் இந்தியா அலுவலகத்திற்கு முன்பு குவியத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல இளைஞர்களின் வருகை அதிகமானது. சுமார் 15000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு கூடினர். இதனால் அந்த பகுதி முழுவதும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இளைஞர்கள் பலர் மரங்கள், சுவர், வாகனங்கள் மீது ஏறி அலுவலகத்திற்குள் செல்ல முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உயிரிழப்பு நடப்பதை தவிர்க்கும் விதமாக ஏர் இந்தியா ஊழியர்கள் கூடியிருந்த அனைத்து இளைஞர்களிடமும் பயோடேட்டாக்களை வாங்கிவிட்டு தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்று கூறினர். இதையடுத்து இளைஞர்களும் பயோடேட்டாக்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக நேர்காணலுக்கு வந்த இளைஞர் ஒருவர் “நான் மும்பையில் இருந்து 400 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் புல்தான மாவட்டத்தில் வசிக்கிறேன். அங்கிருந்து நேர்காணலில் கலந்து கொள்ள 400 கிலோ மீட்டர் பயணம் செய்து இங்கு வந்துள்ளேன்.
நான் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்த வேலை எனக்கு கிடைத்துவிட்டால் போதும். வேலை கிடைத்தால் படிப்பை விட வேண்டும். இருந்தாலும் என்ன செய்வது. நம்முடைய நாட்டில் கடும் வேலை வாய்ப்பின்மை நிலவுகின்றது. மொத்த இளைஞர்களின் நலனுக்காக வேண்டி அரசிடம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.