முகப்பருக்கள் முழுவதுமாக மறைய வேண்டுமா? சர்க்கரையுடன் இந்த பொருளை கலந்து பயன்படுத்துங்க! 

Photo of author

By Sakthi

முகப்பருக்கள் முழுவதுமாக மறைய வேண்டுமா? சர்க்கரையுடன் இந்த பொருளை கலந்து பயன்படுத்துங்க!
நம்மில் ஒரு சிலருக்கு முகத்தில் முகப்பருக்கள் இருக்கும். இது எதனால் ஏற்படுகின்றது என்றால் முதல் காரணம் உடல் சூடு காரணமாக ஏற்படும். இரண்டாவது நாம் எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதால் ஏற்படும். இந்த முகப்பருக்களை முழுவதுமாக நீக்க பலவகையான மருந்துகள் இருக்கின்றது.
இருந்தாலும் இந்த முகப்பருக்களை சர்க்கரையை வைத்து மறையச் செய்யலாம். அது எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* சர்க்கரை
* வெண்ணெய்
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதை நன்கு கலந்துவிட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதை முகத்தில் முகப்பருக்கள் உள்ள இடத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவ விடலாம். இது போல தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் மறைந்துவிடும்.