ஒரு வருடத்தில் இத்தனை குழந்தை திருமணங்களா? வெளியான அதிர்ச்சித் தகவல்! 

Photo of author

By Sakthi

ஒரு வருடத்தில் இத்தனை குழந்தை திருமணங்களா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஒரு வருடத்தில் அதாவது 2023 முதல் 2024 வரை எத்தனை குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது குறித்தான தகவல்களை இந்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வுக்குழு தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய சட்டப்படி பெண்ணுக்கு திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கு திருமண வயது 21ஆகும். சட்டம் இவ்வாறு கூறகின்றது. ஆனால் யாரும் சட்டத்தை பின்பற்றாமல் 18 வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
அந்த காலத்தில் சிறு வயது பெண்களை அதாவது குழந்தைகளை கூட திருமணம் செய்து கொடுத்தார்கள். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. அவர்களின் நல்வாழ்வும் பாதிக்கப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் அவர்களின் வயதிற்கு ஏற்ற உடல்நலம் மற்றும் கல்வி கிடைக்காமல் அவர்களின் முன்னேற்றம் தடைபடுகின்றது.
இவ்வாறு இருக்க குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய குழந்தை பாதுகாப்பு ஆய்வுக்குழு 2023 முதல் 2024ம் ஆண்டு வரை எத்தனை குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது குறித்தான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய குழந்தை பாதுகாப்பு ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 2023 முதல் 2024 வரை ஒரு ஆண்டுக்குள் சட்ட ரீதியாக 265 மாவட்டங்களில் 14137 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதே போல ஊராட்சி அமைப்புகளின் உதவியோடு 59364 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இவை அனைத்தையும் 161 சமூக அமைப்புகள்தான் தடுத்து நிறுத்தியது.
இந்தியாவில் ஒரு நாளில் 4442 குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகின்றது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே 3863 குழந்தை திருமண வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு குழந்தை திருமணத்திற்காக மட்டுமே 11236 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.
2022ம் ஆண்டு குழந்தை திருமணத்திற்காக கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13981ஆக அதிகரித்தது. கட்டாய குழந்தை திருமணத்திற்காக குழந்தைகள் கடத்தப்பட்டது 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2021 மற்றும் 2022 ஆண்டை ஒப்பிடும் பொழுது 2023 மற்றும் 2024ம் ஆண்டில் குழந்தை திருமண சம்பவங்கள் 81 சதவீதம் குறைந்துள்ளது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். மேலும் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.