ஹர்திக் பாண்டியா வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம்! ரசிகர் அனைவரும் அதிர்ச்சி!!
இந்த ஆண்டு இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா வாழ்கையில் ஒரு. சோகமான சம்பவம் நடந்துள்ளது. இதனால் இவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் இந்தியா இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசியின் டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு இறுதிப்போட்டியில் விராட் கோலி அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதே போல மறுபுறம் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா கலக்கினார்.
சிறப்பாக பந்துவீசிய ஹர்திக் பாண்டியா கிளாசன் விக்கெட்டை எடுத்து இந்தியாவை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். குறிப்பாக கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நன்றாக ஆடிக் கொண்டிருந்த டேவிட் மில்லரின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். இதையடுத்து இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இவ்வாறு இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்த ஹர்திக் பாண்டியா அவர்களின் வாழ்க்கையில் சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஹர்திக் பாண்டியா அவரஅவர்களுக்கும் அவருடைய மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் அவர்களுக்கும் விவாகரத்து ஆகியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அவர்களும் செர்பியாவை சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டார்கோவிக் அவர்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை உள்ளது.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் பூகம்பம் கிளம்பியது. அதாவது இவர்கள் இருவரும் கருந்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் விவகாரத்து வாங்கவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகிறது. நடாஷா அவர்களும் அதற்கு தகுந்த வகையில் ஹார்திக் பாண்டியா அவர்கள் விளையாடிய ஐபிஏல் பேட்டிகள் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை காண நேரில் வரவில்லை. மேலும் சமூக வலைதளப் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா அவர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் நடாஷா அவர்கள் நீக்கினார். இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “4 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இணைந்து வாழ்ந்த நானும் நடாஷாவும் மனமொத்து பரஸ்பரமாக பிரிந்து செல்லலாம் என்று முடிவு செய்துள்ளோம். நானும் நடாஷாவும் இணைந்து வாழ்வதற்கு ஏற்ற இருவருமே முடிந்த முயற்சிகளை செய்தோம்.
ஆனால் சேர்ந்து இருக்காமல் பிரிவு தான் சரியான முடிவு என்று இப்பொழுது இருவருக்கும் புரிகின்றது. எங்கள் இருவருக்கும் விவாகரத்து என்பது கடினமான முடிவுதான். இருப்பின் நாங்கள் சேர்ந்து வாழ்ந்த நான்கு ஆண்டுகளில் எங்களுக்கு இடையே இருந்த மகிழ்ச்சி மற்றும் மரியாதை ஆகியவற்றை கருத்தில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.
நானும் நடாஷாவும் எங்களுடைய மகன் அகஸ்தியாவால் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளோம். எங்களுடைய வாழ்கையின் முக்கிய அங்கமாக அகஸ்தியா இருப்பார். எங்கள் மகன் அகஸ்தியாவின் மகிழ்ச்சிக்கு நாங்கள் அனைத்தையும் வழங்க தயாராக இருக்கின்றோம். இந்த கடினமான கஷ்டமான நேரத்தில் எங்களுடைய தனியுரிமையை மதிக்க வேண்டும். எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.