மொபைலுக்கு வந்த 4 கோடி ரூபாய் பில்! இரயில்வே ஊழியருக்கு ஷாக் கொடுத்த மின் கட்டணம்!

0
177
4 crore rupees bill came to mobile! Railway employee shocked electricity bill!
4 crore rupees bill came to mobile! Railway employee shocked electricity bill!
மொபைலுக்கு வந்த 4 கோடி ரூபாய் பில்! இரயில்வே ஊழியருக்கு ஷாக் கொடுத்த மின் கட்டணம்!!
நொய்டாவில் இரயில்வே ஊழியர் ஒருவருக்கு 4 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தியா முழுவதிலும் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மின் கட்டணம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வேறுபடும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு அதன் பின்னர் மின்சார கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது.
தற்பொழுது தமிழக அரசு யூனிட்டுக்கு 50 பைசா வரை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு மக்களும் அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நொய்டாவில் இரயில்வே ஊழியர் ஒருவருக்கு 4 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
உத்திரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வசித்து வரும் இரயில்வே ஊழியர் பசந்த் சர்மா அவர்கள் இந்திய இரயில்வே துறையில் டிரெய்னியாக பணியாற்றி வருகிறார். இதையடுத்து இவருடைய மொபைல் எண்ணுக்கு கடந்த 18ம் தேதி இவருடைய மனைவி பிரியங்கா சர்மா பெயரில் பில் ஒன்று வந்துள்ளது.
அதை பார்க்கும் பொழுது இரயில்வே ஊழியர் பசந்த் சர்மா அவர்களுக்கு ஷாக் அடித்துள்ளது. அதாவது அவருடைய வீட்டின் மின் கட்டணம் 4.02 கோடி ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டும் என்று செய்தி குறிப்பிடப்பட்டிருந்ததை அறிந்த இரயில்வே ஊழியர் வசந்த் சர்மா அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதையடுத்து பசந்த் சர்மா அவர்கள் அவருடைய வீட்டு உரிமையாளருக்கு இந்த தகவலை சோசன் கூறியுள்ளார். வீட்டில் சாதாரணமான பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றேன் ஆனால் இவ்வளவு மின் கட்டணம் வந்துள்ளது. இதைஜூலை 24ம் தேதிக்குள் கட்டவேண்டும் என்றும் இதற்கு 284969 ரூபாய் தள்ளுபடி வந்துள்ளது என்றும்  கூறியுள்ளார்.
இது குறித்து உத்திரப் பிரதேசத்தின் மின்சாரத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் “இந்த செய்தி கம்பியூட்டரால் அனுப்பப்பட்ட செய்தி. இயந்திரக் கோளாறு காரணமாக இந்த செய்தி அனுப்பப்பட்டிருக்கலாம். எங்களுடைய சிஸ்டத்தில் இன்னும் பில் எதுவும் அனுப்பப்பட வில்லை” என்று கூறினார்.
வழக்கமாக 1500 ரூபாய்க்கும் குறைவாகத்தான் மின் கட்டணம் காட்டுவேன் என்று கூறியுள்ள இரயில்வே ஊழியர் பசந்த் சர்மாவுக்கு 4 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்தது மின்சாரத்தை தொடாமலே ஷாக் அடித்தது போன்று அதிர்ச்சி வந்துள்ளது.
Previous articleகுடும்ப கட்சியாக இருந்த திமுக குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது! எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேட்டி! 
Next articleஎல்லாம் கலையுது.. மா செயலாளர்கள் பொறுப்புக்கு வரும் ஆப்பு!! புதிய நிர்வாகிகளை இறக்கும் ஸ்டாலின்!!