ப.சிதம்பரம் தாக்கல் செய்த DREAM BUDGET! அது ஏன் அப்படி அழைக்கப்பட்டது?

0
223
DREAM BUDGET filed by P. Chidambaram! Why is it called that?
DREAM BUDGET filed by P. Chidambaram! Why is it called that?
ப.சிதம்பரம் தாக்கல் செய்த DREAM BUDGET! அது ஏன் அப்படி அழைக்கப்பட்டது?
மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள் ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் டிரீம் பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.
மத்தியில் 1997ம் ஆண்டு தேவகவுடா அவர்களின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்த  நிலையில் ப.சிதம்பரம் அவர்கள் 1997 மற்றும் 1998ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கூட்டணி ஆட்சியாக இருந்த ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிறைய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
ப.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் 40 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதே போல கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதம் 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அதே போல கலால் வரியும் மிகவும் எளிமைபடுத்தப்பட்டது. மேலும் அந்த பட்ஜெட்டில் உபரி கட்டணம் நீக்கப்பட்டு ராயல்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ப.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வெளிநாடுகளின் முதலீட்டுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. இது பொதுத் துறையின் பங்குளை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு அடித்தளமாக அமைந்தது.
ப.சிதம்பரம் அவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதிலும் புதிய விதிகளை கொண்டு வந்தார். அதாவது கார், வீடு, தொலைபேசி, வெளிநாடு பயணம், அசையா சொத்துக்கள் இவை அனைத்தையும் ஒரு நபர் வைத்திருந்தால் அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
அது மட்டுமில்லாமல் ப.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் தாங்கள் ஈட்டும் வருமானத்தை முன்வந்து அரசுக்கு தெரிவிக்கும் (வாலண்டரி டிஸ்குலோசர்) திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அனைவரும் வரி செலுத்துபவர்கள் என்று நம்பப்பட்டதால் ப.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் DREAM BUDGET என்று அழைக்கப்பட்டது.
ப.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்த இந்த டிரீம் பட்ஜெட்டின் விளைவாக 1997ம் ஆண்டில் அரசுக்கு 18700 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்தது. அதன் பின்னர் இந்த வருவாய் 2013ம் ஆண்டு 2 லட்சம் கோடியாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று(ஜூலை23) காலை 11 மணிக்கு தாக்கல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
Previous articleஅனைவருக்கும் இலவச இன்டர்நெட் வழங்கப்படும் மசோதா! மத்திய அரசு ஒப்புதல்! 
Next articleஎங்களுடைய முக்கிய குறிக்கோள் அது மட்டுமே! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!