இந்த பட்ஜெட் கேரளா மீது பாகுபாட்டை காட்டுகின்றது! முதல்வர் பினராயி விஜயன் பேட்டி!
நேற்று(ஜூலை23) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கேரளா மாநிலத்தின் மீதான பாகுபாட்டை காட்டுகின்றது என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(ஜூலை23) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாடே எதிர்பார்த்து காத்திருந்த இந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் குறித்த எந்தவொரு அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை.
இதையடுத்து எதிர்கட்சிகள் அனைத்தும் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேலை வாய்ப்பு, கல்விக் கடன், பெண்கள் முன்னேற்றம், தங்கம் மீதான இறக்குமதி வரி குறைப்பு என்று பல வகையான அறிவிப்புகள் இருந்தாலும் இவை அனைத்தும் நாட்டின் நலனுக்காக அல்ல என்றும் பாஜக தங்களுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே இவ்வாறு பட்ஜெட்டை அறிவித்துள்ளதாக எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மத்திய பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்
மத்திய பட்ஜெட் தொடர்பாக பினராயி விஜயன் அவர்கள் “நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் கேரளா அரசின் மீது மத்திய அரசு கொண்டுள்ள பாகுபாட்டை காட்டுகின்றது. நாங்கள் உண்மையாக பல கோரிக்கைகள் வைத்தோம். ஆனால் அந்த உண்மையான கோரிக்கைகள் அனைத்தும் மத்திய பட்ஜெட் மூலமாக காது கேட்கப்படாத மவுனங்களை சந்தித்துள்ளது.
நாங்கள் வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. மத்திய அரசின் இந்த இரக்கமில்லாத நிலைப்பாடு நிச்சியமாக தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும்” என்று கூறினார். இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து எதிர்கட்சித் தலைவர்கள் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக் ஒன்று.