தி கோட் திரைப்படத்தின் புரொமோசன் வேலைகளுக்காக தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பயன்படுத்தக் கூடாது என்று ரசிகர்களுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், யோகி பாபு, மைக் மோகன், சினேகா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கின்றது.
இதில் கடைசியாக வெளியான ஸ்பார்க் பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் இந்த பாடலில் நடிகர் விஜய் அவர்களின் டிஏஜிங் செய்யப்பட்ட தோற்றமும் எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் தி கோட் படத்தின் புரொமோசன் வேலைகளுக்கு கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கோட் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்பொழுது இந்த கட்சியின் மூலமாக பல ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நடிகர் விஜய் அடுத்து இனிமேல் எந்த திரைப்படத்திலும் நடிக்கப் போவது இல்லை என்றும் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் தி கோட் படத்தின் புரொமோசன் வேலைகளுக்காக கட்சியை பயன்படுத்தக் கூடாது என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தி கோட் திரைப்படத்திற்கு அடிக்கப்படும் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு பதிலாக விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை பயன்படுத்தலாம் என்றும் எந்தவித சூழ்நிலையிலும் அரசியல் கட்சியின் பெயர்களை திரைப்படத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் நடிகர் விஜய் அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்