மல்யுத்தம் என்னை வென்று விட்டது! அனைத்துக்கும் குட் பை! வினேஷ் போகத் பதிவு வைரல்! 

0
97
wrestling-has-won-me-over-goodbye-everyone-vinesh-bhogas-video-is-viral
wrestling-has-won-me-over-goodbye-everyone-vinesh-bhogas-video-is-viral
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தம் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்பொழுது கோலாகலமாக நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தம் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத் அவர்களும் அமெரிக்காவை சேர்ந்த சாரா என் ஹில்டெப்ரண்ட் அவர்களும் தகுதி பெற்றனர்.
இவர்கள் இருவரும் மோதும் இறுதிப் போட்டி நேற்று(ஆகஸ்ட்7) இரவு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் திடீரென்று இந்தியாவை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னர் காலை 9 மணிக்கு அமெரிக்க வீராங்கனை சாராவுக்கும் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அவர்களுக்கும் எடை தகுதி சோதனை நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அவர்களுக்கு உடல் எடை சற்று அதிகமாக இருந்துள்ளது. அதாவது இந்த போட்டியால் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளின் எடை 50 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அவர்களின் உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது.
இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அவர்களுக்கு 100 கிராம் அதிகமாக இருந்தது. இதையடுத்து இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் வினேஷ் போகத் அவர்கள் சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அவர்கள் பதிவுட்டள்ள அந்த பதிவில் “மல்யுத்தம் என்னுடன் போட்டி போட்டு என்னை வென்று விட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னை மன்னிக்கவும்.  அம்மா உங்கள் கனவு, என்னுடைய தைரியம் எல்லாம் உடைந்துவிட்டது.
இதற்கு மேல் என்னிடம் வலிமை இல்லை. நான் என்னுடைய வலிமையை இழந்துவிட்டேன். குட்பை மல்யுத்தம் 2001 – 2004. எனக்கு ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Previous articleமீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இறங்குமுகம் கொண்ட வெள்ளி விலை நிலவரம்!!
Next articleஇனி மாதந்தோறும் 1000 ரூபாய் கிடைக்கும்! நாளை முதல்வர் தொடங்கி வைக்கும் திட்டம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்!