இனி மாதந்தோறும் 1000 ரூபாய் கிடைக்கும்! நாளை முதல்வர் தொடங்கி வைக்கும் திட்டம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்! 

மாதந்தோறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வங்கி கணக்குகளில் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நாளை(ஆகஸ்ட்9) முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் அவர்களுக்கு பல நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஏழை எளிய மக்களுக்காக எவ்வாறு தீவிரமாக செயல்படுகின்றதோ அதே போல ஏழை மாணவர்களின் நலனுக்கும் திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
திமுக அரசு குழந்தைகளின் கல்வியை அடிப்படையாக கொண்டு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு புதுமைப் பெண் என்ற ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தினார். அதாவது 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வி பயில அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்குவது தான் புதுமை பெண் திட்டம் ஆகும்.
இந்த புதுமை பெண் திட்டம் மூலமாக ஏழை எளிய மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வழிவகை செய்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு 2022 – 2023 ஆம் நிதியாண்டில் 2,09,365 மாணவிகள் பயன் அடைந்தனர். இதையடுத்து 2023- 2024 நிதியாண்டில் இன்னும் 64231 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் கூடுதலாக இணைந்துள்ளனர். அதாவது புதுமை பெண் திட்டம் மூலமாக கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய திட்டத்தை மாணவர்களின் நன்மைக்காக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்.
அதாவது அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் நன்மை பெறும் விதமாக மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நாளை(ஆகஸ்ட்9) கோவை மாவட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த திட்டம் மூலமாக 328000 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.
நாளை(ஆகஸ்ட்9) தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கவுள்ளதால் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நாளை 1000 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது. மேலும் பொது அறிவு நூல்கள், புத்தகங்கள் வாங்குதல் போன்ற செலவுகளுக்காக 1000 ரூபாய் வரவு வைக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.