ஈராக் நாட்டில் பெண்களின் வயதை 9ஆக குறைக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது.
ஈராக் நாட்டில் எப்பொழுதும் போர், தீவிரவாதம் என்று ஒரு பக்கமும் கடுமையான சட்டங்கள் ஒரு புறமும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. மக்களை வாட்டி வதைக்கும் ஈராக்கின் கடுமையான சட்டங்கள் மனித உரிமை ஆர்வலர்களுக்கு மத்தியில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது.
ஈராக் நாட்டில் பெண்கள் நடிகையாகவோ அல்லது சமூக வலைதளங்களில் பிரபலமானவராகவோ இருந்தால் அந்த பெண்கள் படுகொலை செய்யப்படுவது இன்றளவும் செய்திகளாக வருகின்றது. அதே போல பெண்கள் பெண்ணுரிமை பற்றி எதாவது பேசினால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது கொடுமைகள் செய்வது போன்ற சம்பவங்களும் நடந்து கொண்டு இருக்கின்றது.
ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் விதமாக தற்பொழுது ஈராக் புதிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது பெண்களின் திருமண வயதை 9ஆக குறைக்கும் சட்ட மசோதாவை ஈராக் அரசு கொண்டு வந்துள்ளது. ஈராக்கின் இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
ஈராக் நாட்டில் ஏற்கனவே கடுமையான போராட்டங்கள் நடத்தி பெண்களின் திருமண வயது 18 என்னும் சட்டம் 1959ல் கொண்டு வரப்பட்டு தற்பொழுது வரை அமலில் இருந்து வருகின்றது. இதற்கு மத்தியில் தற்போதைய ஈராக் அரசு பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9ஆக குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதாவது ஈராக் சட்டத்துறை அமைச்சகம் பெண்களின் திருமண வயதை 9 ஆகவும் ஆண்களின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கும் சட்ட மசோதாவை முன் மொழிந்துள்ளது. இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றது.
இது தொடர்பாக பேசிய மனித உரிமைகள் கண்காணிப்பு ஆராய்ச்சியாளர் சாரா சன்பார் அவர்கள் “பெண்களின் திருமண வயதை ஆகவும் ஆண்களின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கும் ஈராக் அரசின் இந்த முடிவு கடும் கண்டத்திற்கு உரியது. ஏற்கனவே ஈராக் நாட்டில் 28 சதவீதம் பெண்களுக்கு 18 வயது அடைவதற்கு முன்பாகவே திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நேரத்தில் ஈராக் அரசு திருமண வயதை குறைக்கும் விதமான இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவருவது ஈராக் நாட்டை பல சதாப்தங்கள் பின்னோக்கி கொண்டு செல்லும்” என்று கூறியுள்ளார். பெண்களின் திருமண வயதை 9ஆக குறைக்கும் மசோதா ஏற்கனவே ஜூலை மாதம் கொண்டு வரப்பட்டது. பின்னர் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அப்பொழுது கைவிடப்பட்டு தற்பொழுது ஈராக் அரசு மீண்டும் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.