இப்படி செய்தால் உங்களின் பெயர் நீக்கப்படும்! ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு புதிய எச்சரிக்கை!!

0
999
If you're not careful, your name will be deleted! New Warning for Ration Card Holders!!
If you're not careful, your name will be deleted! New Warning for Ration Card Holders!!

தமிழ்நாட்டில் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளின் மூலமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் புதிய ரேஷன் அட்டைகள் தற்போது மேலும் 2.8 குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் இலவச அரிசியும் சலுகை விலையில் இதர பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசானது குடும்ப அட்டை தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் சரி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் மின் ஆளுமை முகமையின் மூலமாக 10 லட்சத்திற்கும் அதிகமானோர் ரேஷன் அட்டையில் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது ஒரு குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் அடக்கம் செய்யும் நிகழ்வில் இறந்தவரின் ஆதார் அட்டையின் நகலுக்கு பதிலாக உறவினர்களின் ஆதார் அட்டையின் நகலினைக் கொடுத்து விடுகிறார்கள். இதனாலேயே பலருடைய பெயர்களானது தவறுதலாக நீக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உறவினர்கள் மற்றும் ஊழியர்களின் இந்த கவனக் குறைவினால்தான் இவ்வாறு ஏற்படுகிறது, எனவே சரியான ஆதார் எண்ணையும், இதுகுறித்து கேட்கப்படும் ஆவணங்களின்  நகல்களையும் அலுவலர்களிடம் கொடுக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

கேட்கப்படாதவர்களின் ஆதார் எண்ணையும் தேவைப்படும் நகல்களையும் இறந்தவர்களின் ஆவணங்களுடன் ஒட்டுமொத்தமாக இணைத்துக் கொடுக்காவிட்டால் இத்தகைய தவறுதல்கள் நிகழாது என்றுத் தெரிவித்துள்ளார்கள்.

Previous articleதிமுக கொடுத்த அதிரடி தகவல்.. பாஜக ஆதரவாளரை தட்டித்தூக்கிய போலீஸ்!!
Next article!இனி தமிழகம் முழுவதும் ஒரு செமஸ்டர் ஒரே தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு