நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கென தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தென் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
தென் சென்னை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெறுவதற்கு 19.08.2024 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க இருப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆவணங்களையும் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.
அதாவது விண்ணப்பதாரரின் வயது 18 இலிருந்து 60 வரையிருக்க வேண்டும். ஏற்கனவே தையல் பயிற்சி கற்றிருப்பதற்கான சான்றிதழ், UDID அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கென கொடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களைப் பெற்றிருத்தல் அவசியம்.
மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள், கால்கள் பாதிப்படைந்திருக்கும் போதிலும் இரு கைகளும் நன்றாக இருக்கப் பெற்றவர்கள் , 75% -க்கும் அதிகமாக மனவளர்ச்சி குன்றியுள்ள தாய்மார்கள் போன்ற வகையிலான மாற்றுத் திறனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பெரும் பயனை அடையக் கூடும்.
இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க https://www.tnesevai.tn.gov.