குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் 1000 ரூபாயை வங்கிகளில் சேமித்து வைத்து அதற்கு 7 சதவீதம் வரை வட்டி பெறுவது எப்படி என்பது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இதற்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதைப் பற்றிப் பார்க்கலாம்.
திமுக கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு அதாவது திருமணம் ஆன ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அன்றிலிருந்து இன்று வரை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாயை தமிழக அரசு வழங்கி வருகின்றது. இந்த 1000 ரூபாய் பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் கடின உழைப்புக்கும் அளிக்கப்படும் அங்கீகாரமாக தமிழக அரசு பார்க்கின்றது. மாதம் 1000 ரூபாய் என்பதை விட வருடம் 12000 ரூபாய் என்ற பெரிய தொகையை பெண்கள் சேமித்து வைத்து அதற்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக 8 சதவீதம் வட்டி பெறுவதாக தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு இதற்காகவே புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
பொதுவாக நாம் வங்கிகளில் பணத்தை சேமித்து வரும் பழக்கத்தை கொண்டுள்ளோம். அவ்வாறு சேமிக்கும் பொழுது வங்கி நமக்கு அதிகபட்சம் 3 முதல் 4 சதவீதம் வட்டித் தொகையை நாம் சேமிக்கும் பணத்திற்காக வழங்கும். ஆனால் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த 1000 ரூபாய் தொகையை சேமித்து வைக்க குறிப்பிட்ட சில திட்டங்கள் இருக்கின்றது. அந்த வகையில் நாம் சேமிக்கும் பொழுது நமக்கு 7.5 சதவீதம் வரை வட்டி கிடைக்கின்றது.
மகளிர் உரிமைத் தொகையை குறிப்பிட்ட சில திட்டங்களில் 5 ஆண்டுகள் வரை நாம் சேமிக்கலாம். அந்த வகையில் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயை சேமிக்க தமிழக அரசு மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தை கூட்டுறவு வங்கிகள் மூலமாக தொடங்கி வைத்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி தரும் இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டம் நீலகிரியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மகளிர் உதவித் தொகை பெறும் யார் வேண்டுமானாலும் இணைந்து 1000 ரூபாய்க்கு 7.5 சதவீதம் வட்டியை பெற்றுக் கொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகை பெறும் திட்டம் கடந்த மாதம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலமாக 148000 பெண்களின் வங்கிக் கணக்குகளில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டம் அடுத்த வருடம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அடுத்த வருடம் விரிவாக்கம் செய்யப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் புதிதாக திருமணமான பெண்களுக்கும், அரசு வேலையில் இருந்து இறந்த ஆண்களின் மனைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த உரிமைத் தொகை பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்காகவும் அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கும் வழங்கப்பட்டு வருகின்றது.