பலதரப்பட்ட அரசின் தொடர்பான பணிகளைச் செய்ய ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதியதாக பால ஆதார் அட்டை கொண்டு வரப்பட்டுள்ளது. அரசால் உருவாக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கான ஆதார் அட்டையானது நீல நிறத்தில் அமைந்திருக்கும். இதன் மூலம் 5 வயது மேற்பட்டவர்களின் ஆதார் அட்டைக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து பயன்படுத்த முடியும்.
வழக்கமான ஆதார் அட்டையானது கருவிழி மற்றும் கைரேகை தரவுகள் அதாவது பயோமெட்ரிக் தரவு முறையில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களின் தகவல்கள் சேமிக்கப்படும். ஆனால் பால ஆதார் அட்டையானது முகப் புகைப்படம் மற்றும் தனித்துவ அடையாள எண் ஆகியற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும். பயோமெட்ரிக் தரவு முறைக்கான செயல்முறை குழந்தைகளிடத்தில் மிகவும் கடினமாக அமையக் கூடும் என்ற காரணத்தினால் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் UID யுடன் சேர்க்கப்படுவதன் மூலம் உருவாக்கப்படும்.
அருகாமையிலுள்ள ஆதார் பதிவு மையத்தை அணுகுவதன்மூலம் உங்களின் குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும். இந்த அட்டையானது குழந்தையின் பிறப்பு அடையாளம், தனித்துவ அடையாள எண் போன்றவற்றைக் கொடுப்பதன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. நீல நிற ஆதார் அட்டை குழந்தைகளின் 5 வயது மட்டுமே பொருந்தும். அதன்பிறகு வழக்கமான அதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்காக பதுவு செய்ய விரும்பும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் https://uidai.gov.in/ என்ற இணையப் பக்கத்தின் வாயிலாக முதலில் நீல நிற ஆதார் அட்டை விண்ணப்பிப்பதற்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஆதார் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தண்ணீரில் தவறி விழுந்தால் கூட மீண்டும் உபயோகிக்கக்கூடிய பிவிசி வடிவில் ஆதார் கார்டு, மின்னணு வடிவிலான eAdhaar மற்றும் கடிதம் வழியாக அனுப்பப்படும் க்யு ஆர் குறியீடு கொண்ட ஆதார் கார்டு மற்றும் நீல நிற பால ஆதார் அட்டை என நான்கு வகைப்பட்ட ஆதார் அட்டைகள் உள்ளன.