ரூ.7 செலுத்தினால் வருடத்திற்கு ரூ.60000 பெறலாம்! மத்திய அரசின் மாஸ் திட்டம்!!

0
274
If you pay Rs.7 you can earn Rs.60000 per year! Central Govt's Mass Scheme!!
If you pay Rs.7 you can earn Rs.60000 per year! Central Govt's Mass Scheme!!

மத்திய அரசால் உருவாக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்தியில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுள்ள திடம் ஆகும். மத்திய அரசானது இந்த திட்டத்தினை 2015-2016 ஆம் வருடத்திற்கான பட்ஜெட்டில் துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் குறிப்பாக அமைப்பு சாரா துறையில் பணியாற்றியவர்கள் வருங்காலத்தில் நிரந்தர ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இத்திட்டம் முக்கியமான பலன்களைக் கொடுக்கின்றது.

அடல் பென்சன் யோஜனா திட்டத்தின்படி, அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்காக முன்கூட்டியே முதலீடு செய்துவர இத்திட்டம் வழி வகுக்கின்றது. பிற்கால ஓய்வூதியத்தை பாதுகாக்கும் இந்த திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய பதினெட்டு வயது முதலிருந்தே சேமிக்கத் தொடங்க வேண்டும். தற்காலத்தில் ஒரு சிறிய அளவு சேமிப்பானது பிற்காலத்தின் பெரிய அளவு ஓய்வூதியமாக நமக்கே வந்து சேரும்.

அதாவது அமைப்பு சாராத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு ரூ.7 ஐச் சேமித்தால் சேமிப்பவர்கள் ஓய்வூதியம் பெறும் காலத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஐந்தாயிரம் ரூபாயைப் பெற முடியும். இதன்மூலம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஓராண்டுக்கு ரூ.60000 தைப் பெற இத்திட்டம் முற்றிலும் உதவுகிறது.

குறைந்த முதலீட்டில் ஓய்வூதியம் பெற விரும்பினால் இத்திட்டத்தில் 18 வயதில் இருந்தே சேமிக்க வேண்டும். அதாவது மாதந்தோறும் ரூ.42 ஐ செலுத்தினால் ஆயிரம் ரூபாயும், ரூ210 ஐச் செலுத்தினால் ஐந்தாயிரம் ரூபாயும் தங்களுடைய வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு மாதமும் பெற முடிகிறது. மேலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணம் செலுத்த விரும்புபவர்கள் ரூ.1239 ஐயும் மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பணம் செலுத்த விரும்புபவர்கள் ரூ.626 ஐயும் செலுத்துவதன் மூலம் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதத்திற்கான ஓய்வூதியத்தையும் வாழ்நாள் முழுவதும் பெற்றுக்கொள்ள முடியும்.

Previous articleரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு அட்டை! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
Next articleபாரத் ஸ்டேட் வங்கியில் ஆவணங்கள் இல்லாமல் 8 லட்சம் பர்சனல் லோன் வேண்டுமா? உங்களுக்கான சில டிப்ஸ் இதோ!