eSevai Centres: இனி இந்த சான்றிதழைப் பெற வேறு எங்கும் அலையை வேண்டாம்! தமிழக அரசு போட்ட மாஸ் திட்டம்!!

0
125
Don't wave anywhere else to get this certificate anymore! Tamil Nadu Government's Mass Scheme!!
Don't wave anywhere else to get this certificate anymore! Tamil Nadu Government's Mass Scheme!!

SELF CERTIFICATION: இனி வரும் காலங்களில் புதியதாக கட்டுமானப் பணிக்கு கட்டிட அனுமதியினைப் பெறுவதற்கு இ- சேவை மையத்தை அணுகுவதன் மூலம் சுய சான்றிதழ் பெற முடியும்.

தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது புதியதொரு மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டுள்ளது. புதியதாக கட்டுமானப் பணிகளை தொடங்க இருப்பவர்கள் அதற்கான கட்டிட அனுமதியினைப் பெறுவதற்கு பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி இருந்தனர்.

மனை மற்றும் கட்டிடங்கள் மேம்பாட்டுத்துறை மூலமாகவோ அல்லது கட்டுமானத் துறையில் அனுபவம் மிக்கவர்கள் மூலமாகவோ மக்கள் கட்டிடம் கட்டுவதற்கான முன் அனுமதி சான்றிதழைப் பெற்று வந்தனர். இது போன்ற சான்றிதழை பிற நபர்களின் வாயிலாக விண்ணப்பிக்க பலதரப்பட்ட மக்களால் லஞ்சப் பணம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் பொருட்டு தமிழக அரசானது ஒரு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் இனி சுய சான்றிதழ் முறை அடிப்படையில் கட்டிட முன் அனுமதி பெற முடியும். அதற்காக விண்ணப்பிக்க வேறு எங்கும் அல்லாடத் தேவையில்லை. அருகிலுள்ள இ- சேவை மையத்தினை அணுகினாலே போதும். https://onlineppa.tn.gov.in/SWP-web/ என்ற இணையப்பக்கம் வழியாக விண்ணப்பித்து கட்டிட அனுமதி பெற சுய சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கான அதிகாரிகள் மூலமான அதிகாரப் பூர்வமான அறிவிப்பானது கூடிய விரைவில் வெளியிடப்படும்.

Previous articleஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தால் உடலில் இந்தந்த அறிகுறிகள் தான் இருக்கும்.. மக்களே உஷார்!!
Next articleஇதை வாங்க மறந்துவிடாதீர்கள்.. இனி ரேஷன் கடையில் இந்த பொருட்களும் வழங்கப்படும்!!