RATION CARD HOLDERS: கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இனி ரேஷன் கடைகளில் நார்ச்சத்து நிறைந்த சிறுதானியங்கள் கொடுப்பதான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் மலிவு விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்றவை வழங்கப்பட்டுவரும் நிலையில் இன்னும் சில புதிய பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன.
அந்த வரிசையில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் கேழ்வரகு, தேங்காய் எண்ணெய், சிறுதானியங்கள் வழங்க இருப்பது மிகவும் ஆச்சரியத்திற்குரிய ஒன்றுதான். ஏற்கனவே தர்மபுரி, நீலகிரி போன்ற மாவட்டங்களில் கேழ்வரகு வழங்கப்பட்ட நிலையில், தென்னை விவசாயிகளால் தேங்காய் எண்ணெய்யை பாமாயிலுக்கு பதிலாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதேபோல், தற்போது கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் நார்ச்சத்து மிக்க சிறுதானியங்கள் இனி வரும் காலங்களில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்களின் மூலம் பொருட்களை கொள்முதல் செய்யும் விவசாயிகள், 2.24 கோடி குடும்ப அட்டைதாரர்கள் என இரு தரப்பினரும் பயன் பெற முடியும். உடலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்க சிறுதானியங்கள் பெரிதும் உதவுகின்றன.