திமுக வை போல் அதிமுக இதனையெல்லாம் செய்யவில்லை!! திமுக ரகசிய உறவு குறித்து அண்ணாமலை ஓபன் டாக்!!

0
293
this-is-the-relationship-between-dmk-and-bjp-edappadi-palaniswami-speech-annamalai-responds-to-eps-talk
this-is-the-relationship-between-dmk-and-bjp-edappadi-palaniswami-speech-annamalai-responds-to-eps-talk

 

ADMK BJP: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நாணயம் வெளியீட்டு விழாவை பற்றி பேசி திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே உள்ள உறவு இதுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவு நாணய வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை(18.08.2024) அன்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி அவர்களின் முகம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மேலும் பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை குறித்து அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் இடையே இரகசிய உறவு இருக்கின்றது என்று விமர்சனம் செய்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அவர்களின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் “முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நாணய வெளியீட்டு விழாவை வைத்து அதிமுக கட்சி அரசியல் செய்வது வேதனையை அளிக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை எந்த ஒரு காரியம் செய்தாலும் அது அரசியலாகத்தான் பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றது. பாஜக கட்சியும் திமுக கட்சியும் எதிரும் புதிருமான சித்தாந்தத்தில் பயணித்து வருகின்றோம். உங்களுக்கே தெரியும்.

இந்திய அரசியலில் முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும் 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நினைவு நாணயம் கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றது.

அதிமுக கட்சி கடந்த 2017ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் கூட நாணயம் வெளியிட வேண்டி அனுமதி கேட்டது. நாங்கள் கொடுத்தோம். அதிமுக கட்சி அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது. மத்திய பாஜக அரசுக்கு ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்று எந்தவித பாகுபாடும் எப்பொழுதும் இருந்தது இல்லை.

கடந்த 2017ம் ஆண்டு திமுக கட்சியின் முன்னாள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் குறித்து நலம் விசாரித்தார். திமுக மற்றும் பாஜக எதிரும் புதிருமான நிலையில் இருந்தாலும் ஒரு அரசியல் தலைவரை மதிப்பக்க வேண்டும். அதுதான் அரசியல் நாகரிகம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

அதே வகையில் தான் இந்த நாணய வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் விரும்பியதால் பாஜக கட்சி சார்பாக முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுளது. இதில் எங்கு அரசியல் இருக்கின்றது.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் லாபம் பெற வேண்டும் என்று பாஜக கட்சியையும் மத்திய அரசையும் குறை கூறி வருகிறார். கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நினைவு நாணயம் வெளியிட்டது போன்று ஜெயலலிதா அவர்களுக்கும் நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று அனுமதி கேட்டால் மத்திய அரசு தரமாட்டேன் என்று சொல்லாது. அனுமதி கோரினால் அனுமதி கிடைக்கும்.

நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத் தவளை போல எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசுகின்றார். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிட்டது யார் என்று உங்களுக்கே தெரியும்.

எம்.ஜி.ஆர் நாணயத்தை அதிமுக கட்சியினரே கூட்டம் கூட்டி அவர்களே வெளியிட்டனர். இதில் எந்தவொரு பெருமையும் கிடையாது. குடியரசுத் தலைவர் எம்.ஜி.ஆர் நாணயத்தை வெளியிட்டு அதை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாங்கியிருந்தால் அதில் தான் பெருமை இருக்கின்றது. அதிமுக செய்யாமல் விட்டதை தற்பொழுது திமுக கட்சி பயன்படுத்தி உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Previous articleமலத்தை அடுத்து குடிநீர் தேக்க தொட்டியில் கலந்த விஷம்.. அதிர்ச்சியில் ஊர் பொது மக்கள்!!
Next articleவிஜய்-க்கு எதிராக IT ரெய்டு.. அண்ணாமலை மற்றும் ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்!! அலார்ட் செய்த அதிமுக MLA!!