அனைத்து வீடுகளிலும் பைப் வழியாகவே எரிவாயு! இனி சிலிண்டர் தேவையில்லை!!

0
206
No more cylinders! All houses are supplied with piped gas!
No more cylinders! All houses are supplied with piped gas!

PNG: இனி சிலிண்டர் பயன்பாட்டிற்குப் பதிலாக பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக வீடுகளில் உள்ள அடுப்புகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டமானது கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

தொழில்நுட்பங்கள் பெருகிக்கொண்டே வரும் இக்காலத்தில் சிலிண்டரில் எரிவாயு வழங்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தற்போது பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக இயற்கை எரிவாயுவானது விரைவில் வழங்கப்பட உள்ளது.

இந்த பிஎன்ஜி இணைப்பினைப் பெற்ற பின்பு, அதற்காக பொருத்தப்பட்ட மீட்டரின் அடிப்படையிலே கட்டணம் செலுத்த நேரிடும். இந்த இணைப்பின் மூலம் எரிவாயு பெறுவதற்கு  பெரிய முனைகளுடைய  பெரிய அளவிலான விட்டம் கொண்ட பர்னர் பயன்படுத்த வேண்டும். தலா ரூ.576 என்ற ரீதியில் சென்னையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பின்ஜி இணைப்பிற்காகப் பதிவு செய்துள்ளனர். எரிவாயுவினை வேகமாகவும் எளிதாகவும் பெற இதற்காக துணை கேஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

ரெகுலேட்டரைத் திருகுவதன் மூலம் எவ்வாறு மின்சாரம் கிடைக்கிறதோ அதேபோல பிஎன்ஜி இணைப்புகளில் எரிவாயு கிடைக்கும். இந்த புதிய வகை இணைப்பானது எல்பிஜி இணைப்பைப் போலவே ரெகுலேட்டேர் வசதிகளைக் கொண்டிருக்கும்.

தனியார் நிறுவனம் இதற்கான பாதைகளை அமைக்கவுள்ளன. ஆனால் சென்னை நகரத்தின் சாலைகளின் கீழே மின்சாரம், இன்டர்நெட், கழிவுநீர் ,தொலைபேசி போன்ற பாதைகள் இயங்கி வருவதால் பிஎன்ஜி இணைப்பு பாதைகளை அமைப்பது சிரமமான ஒன்றுதான். இன்னும் சில வாரங்களிலேயே இதற்கான இறுதி கட்ட பணிகள் முடிவடையும்.

Previous articleTVK BJP கூட்டணி குறித்து முக்கிய தகவல்!! திமுக அதிமுக-வுக்கு எப்பவுமே NO.. விஜய் மாமன் மச்சான் தான்!! 
Next articleஸ்டாலினை சந்திந்த பாஜக முக்கிய புள்ளி! அரசியல் களத்தில் அடுத்த பரபரப்பு!!