Hema Committee: மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகையை கட்டி பிடிக்க வேண்டும் என்பதற்காகவே பிரபல நடிகர் ஒரு 17 முறை ரீடேக் கேட்டதாக ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் பல திடுக்கிடும் உண்மைகளையும் வாக்கு மூலங்களையும் ஹேமா கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மலையாள சினிமா உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்வு காணும் வகையில் கேரள அரசால் ஹேமா கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டி தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஹேமா கமிட்டி தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் மலையாளம் சினிமாவில் பெண்கள் ஏதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மலையாளம் சினிமாவில் பெண்கள் வெறுக்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகின்றது. குறிப்பாக இந்த அறிக்கையின் 55 மற்றும் 56ம் பக்கங்களில் மலையாளம் சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் குற்றங்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டிக்கு முன்னணி நடிகர்கள் பலரும் தங்களிடம் பாலியல் சீண்டல்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டதாக அறிவித்துள்ளனர்.
மலையாள சினிமாவில் சற்று அதிகமாகவே பாலியல் ரீதியான சீண்டல்கள் இருக்கின்றது. தற்பொழுது சினிமாவை பார்க்கும் பொழுது அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது. அட்ஜஸ்ட்மென்ட் செய்ய அழைப்பதாக நடிகைகள் யாரும் வெளியே கூறுவது இல்லை. ஏன் இந்த என்றால் வெளியே கூறினால் குடும்பத்தினருக்கு மிரட்டல் போவதாக ஹேமா கமிட்டியிடம் அச்சத்துடன் பெண்கள் பேட்டி அளித்துள்ளனர்.
சினிமாவில் பாலியா சீண்டல்களுக்கு ஒப்புக் கொள்ளாத நடிகைகள் அனைவரையும் எதாவது வகையில் முத்திரை குத்தி ஒதுக்கி விடுகின்றனர். மேலும் இதுகுறித்து போலீஸிடம் கூறும் நடிகைகளுக்கும் சினிமாவில் வாய்ப்பு கொடுக்கப்படாமல் ஒதுக்கப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் அந்த அறிக்கையில் மலையாள சினிமாத்துறையை ஒரு மாஃபியா கட்டுப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள ஹேமா கமிட்டி பாலியல் ஆசைகளுக்கு இணங்காத நடிகைகளை மீண்டும் மீண்டும் நடிக்க வைத்து துன்பம் செய்வதாக கூறியுள்ளது.
அந்த வகையில் ஹேமா கமிட்டி இந்த அறிக்கையில் பிரபல நடிகர் குறித்து ஒரு தகவலை கூறியுள்ளது. அதாவது பிரபல முன்னணி நடிகர் ஒருவர் நடிகை ஒருவரை கட்டிபிடிக்கும் சீனில் நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி அந்த நடிகையை கட்டிப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த நடிகர் 17 முறை ரீடேக் வாங்கி நடித்தாராம். ஆனால் செய்தது தவறு என்று தெரிந்தும் கூட இயக்குநர் அந்த நடிகையை கடுமையாக திட்டினாராம். இதை ஹேமா கமிட்டி தன்னுடைய அறிக்கையில் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் இந்த அறிக்கையில் பாலியல் வேண்டுகோளுக்கு சம்மதிக்கும் நடிகைகளுக்கு மட்டுமே நல்ல உணவு அளிக்கப்படும். மேலும் நடிகைகளை நிர்வாணமாக நடிக்கச் சொல்லி இயக்குநர்களும் தயாரிப்பாளர்களுமே கட்டாயப்படுத்துகின்றனர் என்பது போல பல சம்பவங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது ஹேமா கமிட்டி. தற்பொழுது இந்தியா முழுவதும் ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தான் பேசு பொருளாக மாறி வருகின்றது.