BC மற்றும் MBC என்று அழைக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 3 லட்சம் மானியம் கிடைக்கும் என்று சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், சீர் மரபினர் போன்ற இனத்தை சேர்ந்த நபர்கள் நவீன சலவையகம் வைக்க தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி வருகின்றது. இதை பெற்றுக் கொள்ள தகுதிகள் என்னென்ன யார் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தமிழக அரசானது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், சீர்மரபினர் ஆகிய இனத்தை சேர்ந்த மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற பல வகையான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
அதில் ஒன்று நவீன சலவையகம் அமைக்க 3 லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய நிதியுதவி ஆகும். அந்த வகையில் நவீன. சலவையகம் அமைக்க தேவையான மூலப்பொருட்கள், இயந்திரங்கள், பிற. நிகழ்வுகளுக்காக தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கி வருகின்றது.
இந்த திட்டத்தில் விண்ணப்பித்து 3 லட்சம் ரூபாய் மானியம் பெறுவதற்கு 10 பேர் கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். அதே போல அந்த பத்து பேரும் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் சம்பளம் பெறும் நபர்களாக அதாவது ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறக்கூடாது. அவர்களின். ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெற விரும்புவர்கள் மேற்கூறிய படி 10 பேர் கொண்ட ஒரு குழுவாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு சென்று. தேவையான ஆவணங்களை காண்பித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மானியம் மட்டுமில்லாமல் விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது பாகற்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், புடலங்காய் போன்ற கொடி வகைகளை வளர்க்கவும் தமிழக அரசு மானியம் வழங்கி வருகின்றது. அதன்படி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் விவசாயிகள் மானியம் பெற வேண்டும் என்றால் சிட்டா, வரைபடம், அடங்கல், விஏஓ சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ் புக் போன்ற ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு சென்று தோட்டக் கலைத்துறை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.
விவசாயிகளுக்கு போன்றே ஆடு வளர்ப்பவர்களுக்கும் இன்னும் பிற வேளாண்மை நொடர்பான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசால் மானியம் வழங்கப்படுகின்றது. கடந்த 2022-23ம் ஆண்டில் இரண்டாவது முறையாத தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் படி பயிர் சாகுபடியுடன் கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவனப் பயிர்கள், தேனீ வளர்ப்பு போன்ற வேளாண்மை தொடர்பான பணிகளை சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் வீதம் 13 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பண்ணைய செயல்விளக்கம் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதாவது பயிர் சாகுபடி(ஊடு பயிர் அல்லது வரப்பு பயிர்) செய்வதற்கு 5000 ரூபாய், கறவை மாடு அல்லது எருமை மாடு வாங்க 15000 ரூபாய், 10 ஆடுகள் வாங்குவதற்கு 15000 ரூபாய், 10 கோழிகள் வாங்குவதற்கு 3000 ரூபாய், இரண்டு தேனீ பெட்டிகள் வாங்குவதற்கு 3200 ரூபாய் வழங்கப்படுகின்றது. இது கூடவே பசுந்தீவனங்களை உற்பத்தி செய்ய 10 சென்ட் இடத்திற்கு 800 ரூபாய் வீதம் 50 சதவீதம் மானியமாக 50000 ரூபாய் வழங்கப்படுகின்றது.