பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம்

0
99

பெரும்பாலும் திருமணத்தில் தாலி கட்டுதல் நிகழ்ச்சி அதாவது முகூர்த்த நேரம் பிரம்ம முகூர்த்தத்தில் தான் வைப்பர். ஆனால் ஏன் பிரம்மமுகூர்த்தத்தில் வைக்கின்றனர்.மற்றும் பிரம்ம முகூர்த்தத்தில் படித்தால் எளிதில் மனப்பாடம் ஆகும் என்று பெரியோர்கள் சொல்லி கேட்டிருப்போம்.

அப்படி என்ன இந்த பிரம்ம முகூர்த்தத்தின் விசேஷம் பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன என்பதனை குறித்து இந்தப் பதிவில் விளக்கமாக காணலாம்.

அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள கால இடைவெளியை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவோம். இரவில் உறங்கும் உயிரிகள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவி தானே.ஒவ்வொரு பொழுதிலும் காலையில் எழும்போது புத்துயிர் பெறுகிறோம். அதாவது புதிதாக பிறக்கின்றோம் என்று அர்த்தம் இதனை ஸ்ருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம்.

உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைப்பது பிரம்ம பகவான் ஆகும்.ஒவ்வொருவரையும் படைக்கும் இவரின் பெயரையே சுட்டி காட்டும் வகையில் பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்.பிரம்ம நட்சத்திரத்திற்கு யோக தோஷங்கள் போன்ற எதுவுமே கிடையாது. அதனாலேயே இது எப்போதுமே சுபவேளையாக கருதப்படுகிறது.

எனவேதான் பெரும்பாலும் திருமணத்தின் முகூர்த்த நேரம் பிரம்ம முகூர்த்ததிலையே வைக்கின்றனர். மேலும் திருமணம் என்பது இரு மனங்கள் இணைந்து புது வாழ்வை தொடங்குவதால் அவர்கள் வாழ்வும் வம்சமும் தலைக்க பிரம்மமுகூர்த்தத்தில் வைக்கின்றனர்.

அடுத்தபடியாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து படித்தால் நல்ல மனப்பாடம் ஆகும் என்று கூறுவதற்கு காரணம் அவ்வேளையில் ஆக்சிஜன் அதிகப்படியாக கிடைப்பதால் அவ்வேளையில் எழுந்திருக்கும் நமக்கு ஆக்சிஜன் அதிகம் கிடைக்கப்பெற்று மூளை புத்துணர்ச்சியாக இருக்கும்.

அதுமட்டுமன்றி மனது மற்றும் மூளை இரண்டுமே அவ்வேளையில் எந்த ஒரு முரண்பாடான சிந்தனைகள் இல்லாமல் இரண்டையும் ஒருநிலைப்படுத்த முடியும்.இவ்வாறு ஒருநிலைப்படுத்துவதால்தான் நம் அந்த வேலையில் படிக்கும்போது எளிதில் மனப்பாடம் ஆகிறது.

அதேபோன்று இந்த நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டை செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.அத்துடன் இந்த வேளையில் கணவன் மனைவி உறவு வைத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தையால் வம்சம் தழைக்கும் என்பது வேதங்கள் கண்ட உண்மை.