தஞ்சாவூர் கூத்தக்குடி பகுதியிலுள்ள அரசு பள்ளிக்கு கொரோனா நிவாரண உதவி

0
96

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா உட்பட்ட கூத்தக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று 10.06.2020 கொரோனா பேரிடர் கால நிவாரணப் பொருள்கள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.தங்க.த.கார்த்திகேயன் மற்றும் ஆசிரியை திருமதி.தே. கீதா அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் திரு. சிவகுருநாதன் அவர்கள் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு உரை நிகழ்த்தி பள்ளி மாணவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் திருமதி.சந்திரா அவர்களும் கலந்து கொண்டார்.