என்னை நீ மட்டும் அண்ணா என்று கூப்பிட வேண்டாம்!! சாய் பல்லவிக்கு சிவகார்த்திகேயன் போட்ட கண்டிஷன்!!

சிவகார்த்திகேயன்  சாய் பல்லவியிடம் தன்னை  அண்ணா என கூப்பிட வேண்டாம் என பல ஊடகங்களில் மீம்ஸ் மூலம் பரவி வர காரணம் இதுதானா! அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்ததற்கு  இது தான் காரணமா! அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது.

அதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி  மற்றும்  ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.  அப்பொழுது சிவகார்த்திகேயன்   ஒவ்வொரு நடிகை மற்றும்  நடிகர்கள் என  ஹைலைட் செய்து நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது சிவகார்த்திகேயன் ஒரு அதிர்ச்சி தரும் உரையை கூறினார்.

நான் சாய் பல்லவியின்  தீவிர ரசிகன் காரணம் அவர் நடித்த பிரேமம்  படம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தை பார்த்த பிறகு உடனே சாய்  பல்லவியிடம் கால் செய்து  “மலர் டீச்சர்” நன்றாக நடித்துள்ளார்கள் என கூறினேன் அப்போது சாய் பல்லவி அண்ணா தேங்க்யூண்ணா! என்றார் .

அதற்கு சிவகார்த்திகேயன்  என்னை அண்ணா என கூப்பிட வேண்டாம் என  விளையாட்டாக கூறினேன்.  பிறகு எதிர்காலத்தில் நாம் இருவரும் சேர்ந்து படம் நடிக்கலாம் என கூறினேன் . அது இப்பொழுது நிஜமாக மாறியது எனக்கு மிகவும் சந்தோசம் என கூறினார்.

 மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் இருந்தால் எந்த அளவிருக்கு மக்கள் ஆதரவளிபார்களோ அந்த அளவுக்கு  சிவகர்த்திகேயனுக்கு  மக்கள் அதிகம்  ஆதரவளித்தார்கள் என்பதை இந்த விழாவில் காண முடியும். மேலும்  சாய் பல்லவி தனக்கு ஒரு நல்ல தோழி என சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில்   கூறிய உடனே  சாய் பல்லவி முகம் வெட்கத்தில் சிவந்தது.