கோவிலில் வாயிற்படியை மிதிக்காமல் ஏன் தாண்டிச் செல்ல வேண்டும்?

0
161

கோவிலின் வாயிற்படி பெரும்பாலும் அஞ்சு பஞ்சலோகத்தால் வைக்கப்பட்டிருக்கும். அல்லது வேப்பமரம் இலுப்பை மரம் போன்ற தெய்வீக சக்தி வாய்ந்த மரங்களால் அதன் வாயிற்படிகள் பொருத்தப்பட்டிருக்கும்.பெரும்பாலோனோர் கோவிலுக்கு செல்லும் போது அதன் வாயில் படியை மிதித்து உள்ளே நுழைவர். இது ஆன்மீகத்தின் படி முற்றிலும் தவறு என்று சொல்லப்படுகிறது.

பொதுவாகவே நாம் கோவிலுக்கு செல்வது மன அமைதியை நம்மில் நிலைநிறுத்தவும், எதிர்மறை ஆற்றலை அல்லது எதிர்மறை சிந்தனைகளை வெளியேற்றவும் ஆகும்.கோவிலினுள் செல்லும்போது எப்படி வேண்டுமானாலும் போய்விடலாம் என்றால் நம்மில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நம்மை விட்டு போகாது.

கோவிலின் உள் நுழையும் பொழுது நாம் தவறாமல் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஆன்மிக சஸ்திரங்கள் கூறுகிறது.

முதலில் கோவிலின் உள் நுழைவதற்கு முன்பு கோவிலின் குளத்திலோ அல்லது வெளியே உள்ள தண்ணீர் குழாயிலோ முகம் ,கை ,கால்களை அலம்பி விட்டு சிறிது தண்ணீர் எடுத்து மூன்று முறையாக தலைக்கு தெளித்துவிட்டு செல்ல வேண்டும்.உள்ளே செல்வதற்கு முன்பாக வாயிற்படியில் காவலுக்காக உள்ள காவல் தெய்வங்களை வணங்கி விட்டு செல்ல வேண்டும்.பின்னர் கோவிலில் வாயில் படியை தொட்டு வணங்கிவிட்டு அதை மிதிக்காமல் உள்ளே செல்ல வேண்டும்.

வாயில் படியை மிதித்து செல்லக் கூடாது என்பதற்கான காரணம்?

கோயிலுக்கு போகும் போது எதிர்மறையான ஆற்றல்களையும் மனக்கவலைகளோடும் செல்வோம்.கோவிலில் போடப்பட்டிருக்கும் வாயிற்படி அஞ்சு பஞ்சலோகத்திலோ அல்லது வேம்பு அல்லது இழுவை மரத்தினாலோ ஆனவையாகும். அதற்கு நேர்மறை சக்திகள் அதிகம் இருக்கும். இதனால் கோயிலின் உள் நேர்மறை சக்திகள் மட்டுமே இருக்கும். அந்த வாயில் படியை மிதித்து செல்லும்போது நம்முடனே எதிர்மறை ஆற்றலும் உள்ளே வரக்கூடும். அதனாலேயே வாயில் படியை மிதித்து விட்டு உள்ளே வரக்கூடாது என்று கூறுவர்.

நம் வாயில் படியை மிதிக்காமல் மனதை ஒரு நிலைப்படுத்தி அதனைத் தொட்டு கும்பிட்டு செல்லும் போது நம்முடைய மனக்கவலைகள் எதிர்மறை ஆற்றல்கள் கோவிலின் வெளியே நின்றுவிடும்.உள்ளே போகும்போது எந்த கவலையும் எதிர்மறை ஆற்றலும் இல்லாமல் சாதாரண மனிதனாக உள்ளே நுழைவோம். இதனால் மனிதனின் கவலைகள் கஷ்டங்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அவரை வந்து சேரும் என்பதற்காகவே ஆன்மீக ரீதியாக கோயிலின் வாசல் படியை மிதித்து விட்டு செல்லக் கூடாது என்று கூறப்படுகிறது.

Previous articleஅரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட திமுகவினர்! எம்.எல்.ஏ வை இழந்தும் திருந்தவில்லையா?
Next articleஇரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்! முக்கிய அறிவிப்பு!