Ration Card:தமிழகத்தில் ரேஷன் அட்டையில் இகேஒய்சி என்ற அப்ட்டே செய்யாவிட்டால் அந்த அட்டை செல்லாது.
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைவான விலையில் அரிசி, பருப்பு,போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதே ரேஷன் கார்டுகள். ஆனால் இப்போது மகளிர் உரிமை தொகை வாங்க ரேஷன் கார்டு அடிப்படையாக உள்ளது.
அது மட்டும் அல்லாமல் பல வகையான திட்டகளுக்கு இந்த ரேஷன் கார்டு பயன் படுகிறது.ஆனால் இப்போது ரேஷன் கார்டு-ல் பல புதிய அப்டேட்கள் வந்துள்ளது. அதில் இகேஒய்சி சரிபார்ப்பு மிகவும் முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை இணையத்தின் மூலம் அப்டேட் செய்து கொள்ளலாம்.
இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30வரை கொடுக்கப்பட்டு இருந்தது.ஆனால் மக்களுக்கு அந்த கால அவகாசம் போதாததால் தற்போது அக்டோபர் 30வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறைந்த நாட்களே உள்ள நிலையில் மக்கள் விரைவில் தனது ரேஷன் கார்டு அப்டேட் செய்து சரிபார்க்கப்பட வேண்டும். அப்படி இல்லையெனில் https://tnpds.gov.in/ இந்த இணையத்தில் சென்று சரிசெய்து கொள்ளலாம்.
ஆனால் இந்த அப்டேட் மிக முக்கியம் என அரசு தெரிவித்துள்ளது.மேலும் இதை ஆன்லைன் சென்டரில் மிக எளிதாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி இந்த அப்டேட் செய்ய விட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.