திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ராஜ கண்ணப்பன், மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இருந்தார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை இழிவுபடுத்தியதால் சமீபத்தில் உயர்கல்வி துறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது ஊழல் புகார் எழுந்து உள்ளது.
இந்த நிலையில் சென்னை அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சென்னை ஜிஎஸ்டி சாலையில் அமைந்து உள்ள அரசுக்கு சொந்தமான ரூ .411 கோடி மதிப்புள்ள 4.52 ஏக்கர் நிலத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவருடைய மகன்கள் மூலம் அக்கரமித்து, அவரது குடும்ப கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலம் புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தொடர்ந்து புகார்கள், சர்ச்சை புகார்கள் வருவதால், அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது போன்ற ஊழல் புகார்கள் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும், 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகி வருகிறது.