Ration Card: புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்பவர்களுக்கு இரண்டு முக்கிய சான்றிதழ் வேண்டும் இல்லையெனில் நிராகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்பவர்களுக்கு எப்போது கிடைக்கும் என அரசு தரப்பில் ஒரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு இப்போது ரேஷன் கார்டு அப்ளை செய்தவர்களுக்கு ஓராண்டிற்கு பிறகு மீண்டும் புது கார்டு விநியோகத்தை தொடங்கிவிட்டது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களிடம் இருந்து இரண்டு முக்கிய சான்றுகளை கட்டாயமாக்கி உள்ளது.
இதற்கான காரணம் மகளிர் உரிமை தொகை பெற ரேஷன் கார்டு முக்கியமாக தேவைப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய தொடங்கிவிட்டார்கள். இதனால் அரசு சில மாதங்களுக்கு ரேஷன் அட்டை வழங்கும் விநியோயகத்தை நிறுத்தி வைத்தது.
இந்த காரணத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு பெயர் நீக்கல், பெயர் சேர்ப்புகளுக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் திருமணச் சான்றிதழ் கட்டாயமாக்கியுள்ளது. மேலும் 2023-இல் பெறப்பட்ட 2.9 லட்சம் விண்ணப்பங்களில் 1.3 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
2024-இல் விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது பரிசீலனையில் உள்ளது. அது மட்டும் அல்லாமல் திருமணமான புதிய தம்பதிகளும் திருமணச் சான்றிதழை கட்டாயம் சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் சரியான ஆவணங்களை சமர்பிக்காமல் இருந்தாலும் புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த தகவலை பயன்படுத்தி முறையான சான்றிதழுடன் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பியுங்கள். இல்லையெனில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.