TVK: தவெக கட்சி முதல் மாநாட்டில் கலந்து கொண்ட மேட்டுர் பகுதியை சேர்ந்த 74 வயது மூதாட்டி லாரி மோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தவெக கட்சி முதல் மாநாடு 27.10.2024 அன்று விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அந்த மாநாட்டில் எண்ண முடியாத அளவுக்கு தொண்டர்கள் குவிந்தார்கள். தவெக கட்சி தலைவர் ஏற்கனவே தனது மாநாட்டுக்கு யாரெல்லாம் வர வேண்டாம் என ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் உங்களின் ஒருவனாக இதை ஏற்று நடைபெருங்கள் என்று கூறி இருந்தார்.
இருந்த போதிலும் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை ஆர்வத்தில் இருந்தார்கள். இதனால் பல பேர் மாநாட்டுக்கு சென்றுள்ளார்கள். அதில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு வயது 74. இவர் மாநாடு நடந்த அன்று அந்த பகுதியை சேர்ந்த அனைவருடன் சென்றுள்ளார்கள்.
மாநாடு முடிந்த பிறகு ஆம்னி பஸ்சில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது டீ குடிக்க வண்டியை நிறுத்திய போது பாட்டி இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது ரோட்டில் வந்த லாரி மோதி விபத்தில் சிக்கினார். உடனே அவரை மீட்டு அங்குள்ள உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் நேற்று காலை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மூதாட்டியை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சேலம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டும் அல்லாமல் மாநாட்டுக்கு சென்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.