திருப்பதி பக்தர்கள் தேவஸ்தானம் வர வேண்டாம்!! கோவில் நிர்வாகம் அட்வைஸ்!!

0
125
Devotees of Tirupati do not come to Devasthan!! Temple Administration Advice!!
Devotees of Tirupati do not come to Devasthan!! Temple Administration Advice!!

Thirupathi: திருப்பதியிலிருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு மிக சிறப்பான கோவில். இந்த நிலையில் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்துள்ளது என வெளியான தகவல் உண்மை என்று நிரூபணம் ஆகி, திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கேட்கும் விதமாக பூஜை ஒன்று நடத்தினர். அதை தொடர்ந்து தற்போது திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில் கோவிலுக்கு பாதயாத்திரை மூலம் வர வேண்டாம் என அறிவித்தது. ஏனெனில் மலையில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதால்,  உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வது நல்லதல்ல, அதற்கான காரணம் மூச்சுத்திணறல் ஏற்படும். இது மட்டும் அல்லாமல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பிரச்சனைகள் உடையவர்கள், இவர்களும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக வர வேண்டாம் என அறிவித்துள்ளது.

பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு திடீரென்று உடல் நல குறைவு ஏற்பட்டால் அலிபிரி மலைப்பாதையில் 1500-வது படி மற்றும் காலி கோபுரம், பாஷ்ய கர்லா சன்னதி அருகே மருத்துவ உதவி மையம் உள்ளது. மேலும் அஸ்வினி மருத்துவமனை, பிற மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவ வசதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. எனவே பாதுகாப்புடன் திருப்பதி கோவிலுக்கு வந்து செல்ல வேண்டும் என்பதற்காக இந்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Previous articleதீபாவளிக்கு அடுத்த நாள் மூடப்படும் இறைச்சி கடைகள்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!
Next articleஅரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!