கைதியை இந்த வேலைக்கெல்லாம் பயன்படுத்துவீர்களா!! உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கை!!

0
80
Will you use the prisoner for all this work!! Supreme Court takes strict action!!
Will you use the prisoner for all this work!! Supreme Court takes strict action!!

Chennai: ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் எப்போதும் அதற்கு தண்டனை உள்ளது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை டிஐஜி வீட்டு வேலை செய்ய அழைத்து சென்று, அங்கு பணம் திருடியதாக கூறி அவரை லாக்கப்பில் வைத்து அடித்தனர். இந்த தகவலை அறிந்த அவரது அம்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் டிஐஜி-க்கு எதிரான விசாரணையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் அதற்கான தீர்ப்பு விரைவில் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதன் அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதி மற்றும் குற்றவாளிகளை தனது சொந்த வீட்டு வேலைக்காக பயன்படுத்த கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். சிறை கைதிகளை இது போன்று வேலைகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என டிஐஜி-க்கு உத்தரவிட்டனர். கைதிகள் மீண்டும் குற்றம் செய்ய கூடாது என எண்ணி தான் அவர்களுக்கு தண்டனை வழங்குகிறோம். இது போன்ற செயல்களை செய்ய வைக்க கூடாது என தெரிவித்தார். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவார்கள்.

Previous articleஷமி அணியில் இடம்பெற வேண்டும்!! திமிர்த்தனம் பிடித்த இந்திய அணி விமர்சித்த ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர்!!
Next articleஇந்தியா-நியூசிலாந்து கடைசி போட்டி யாருக்கு சாதகம்!! ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி!!!! ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி!!