தீபாவளிக்கு விமானத்தில் படையெடுக்கும் மக்கள்!! கட்டணம் அதிரடி உயர்வு!! அதிர்ச்யில் பயணிகள்!!

0
78
People invade Diwali by plane!! Fee hike!! Passengers in shock!!
People invade Diwali by plane!! Fee hike!! Passengers in shock!!

Diwali: தீபாவளி காரணமாக தனது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை அனைவருக்கும் உள்ளது. இந்த நிலையில் விமான கட்டணம் கிடுகிடுவென மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

தீபாவளி இன்னும் இரண்டு நாட்களில் வர உள்ள நிலையில் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராகுகிறார்கள். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பிரச்சனை வர கூடாது என எண்ணி தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் தரை வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்தால் அனைவரும் செல்ல முடியாது என எண்ணி விமானத்தில் செல்லலாம் என எண்ணுகிறார்கள்.

இந்த நிலையில் மக்கள் பார்வை விமான நிலையத்தை நோக்கி சென்றுள்ளது. இதனால் விமான துறை அதிரடியாக பயணிகளின் கட்டணத்தை அதிகமாக்கி உள்ளது. இந்த கட்டணம் எப்போதும் இல்லாத அளவிற்கு மூன்று மடங்காக உயர்ந்து உள்ளது.

உயர்த்தப்பட்ட கட்டண விபரங்கள்:சென்னை-திருச்சி -ரூ.8,211 முதல் ரூ.10,556 வரை, சென்னை-மதுரை- ரூ.11,745 முதல் ரூ.17,749 வரை, சென்னை-தூத்துக்குடி- ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை, சென்னை-கோவை – ரூ.7,872 முதல் ரூ.13,428 வரை,  சென்னை-சேலம் – ரூ.8,353 முதல் ரூ.10,867வரை, சென்னை- புதுடில்லி- ரூ.5,802 முதல் ரூ.6,877 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்னும் சில நகரங்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் வேதனையில் உள்ளார்கள்.

Previous articleதமிழக மக்களுக்கு அரசு அறிவித்த திடீர் சர்ப்ரைஸ்!! தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை!!
Next articleஜெயலலிதா- வை கட்டாயம் காப்பாத்திருக்கலாம் இதனால் தான் இறந்தார்- அதிமுக மாஜி அமைச்சர்!!