School holidays: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 31 அன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 1 அன்று விடுமுறை என அறிவித்துள்ளது.
தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா அளவிற்கு தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 31 அன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் தங்களின் ஊருக்கு செல்ல வசதியாக நவம்பர் 1-ம் தேதியும் பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேர்ந்து மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. 01.11.2024 அன்று அளிக்கப்பட்ட பொது விடுமுறை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து நிறுவனங்களும் 09.11.2024 அன்று செயல்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் இம்முறை தீபாவளி பண்டிகை முன்கூட்டியே அதாவது, அக்டோபர் 30ம் தேதி வருகிறது. ஆனால் முந்தைய வருடம் விடுமுறை நாட்கள் பார்த்து வந்ததால் பள்ளி மாணவர்கள் வருத்தத்தில் இருந்தார்கள். ஆனால் இந்த வருடம் தீபாவளி வேலை நாட்களில் வந்ததால் அரசே விடுமுறை அளித்தது மாணவர்களுக்கு மிக அதிகமாக சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்த வருடம் தீபாவளி பண்டிகை பள்ளி மாணவர்களுக்கே என அனைவரும் சந்தோஷத்தில் உள்ளார்கள். இந்த விடுமுறை மட்டும் அல்லாமல் மீண்டும் நாளை பள்ளி, கல்லுரிகளுக்கு அரை நாள் விடுமுறை என அறிவித்துள்ளது.