Tamilnadu Day: தமிழ்நாட்டு நாள் என்பது தமிழுக்கென தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் தினமாகும். அந்த நாள் நவம்பர் 1 என தவெக தலைவர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்திய விடுதலைக்கு பிறகு மொழி வழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த நிலையில் இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இந்த கோரிக்கை ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. இதனால் பல விதமான கலவரங்கள் ஏற்பட்டன.
எந்த ஒரு வழியும் இல்லாமல் இந்திய ஒன்றிய அரசு 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரித்தது. இதன் அடிப்படையில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, போன்ற கன்னட மொழிகள் பேசிய பகுதிகளை கொண்டு கேரளா, ஆந்திரபிரதேசம், மைசூர் என தனி தனி மாநிலங்கள் நிறுவப்பட்டன. அதில் சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகள், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சென்னை மாநிலத்தை மொழிவாரியாக பிரித்த நாள் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அக்டோபர் 25, 2019 அன்று வெளியிட்டது. அதன் அடிப்படையில் தவெக தலைவர் தனது எக்ஸ் தல பதிவில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.