Gold News: ஆபரண தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. அந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை அதிகரிக்க மற்றும் குறைய காரணம் பொருளாதாரத்தில் பட்ஜெட் அறிவிக்கும் நிலையை பொறுத்து மாறுபடும். அந்த வகையில் தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டு விற்பனை ஆனது. அதை தொடர்ந்து மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. இப்படி விலை அதிகரிப்பதை பார்த்து மக்கள் நகை எப்படி வாங்குவது என பயத்தில் மூழ்கி விட்டார்கள்.
இதை தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை சரிந்து கொண்டே சென்றது. அந்த வகையில் ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. மீண்டும் தங்கம் உயர்ந்து கொண்டே சென்றது. அந்த வகையில் கடந்த 20ம் தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. பிறகு தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையில் இருந்தது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு பவுன் ரூ.58,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி ரூ.106-க்கும் கிலோ ரூ.1லட்சத்து 6 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மற்றும் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 680 வரை விலை குறைந்துள்ளது.