Politics:த.வெ.க மீதான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் கண்ணியத்தோடு நிர்வாகிகள் பதிலடி கொடுக்க அறிவுரை வழங்கியுள்ளார் விஜய் .
சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் கட்சி செயற்குழு கூட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் பங்கேற்ற த.வெ.க தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய அறிவுறுத்தலை வழங்கி வருகிறார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் த.வெ.க மாவட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளார்கள். தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டிற்கு பிறகு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களால் த.வெ.க மீது எதிர்மறை கருத்துக்களை தெரிவித்தார்கள். அவர்கள் எதிர்ப்புகளை அறிக்கைகள் மூலமாகவும் பொது கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பின் வாயிலாகவும் த.வெ.க கொள்கை மீது விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தவெக மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் கூறலாமா! வேண்டாமா! என்ற, கேள்வி மூன்று நாட்களாக தொண்டர்களிடையே நிலவி வந்துள்ளது. அதை விளக்கும் வகையில் விஜய் அறிவுரை வழங்கி இருக்கிறார். அதாவது, த.வெ.க மீதான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் கண்ணியத்தோடு நிர்வாகிகள் பதிலடி கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.
மேலும் பெண்கள் அதிக அளவில் மாவட்ட கட்சி பொறுப்பில் இருக்க வேண்டும். புதிய தொண்டர்களை சேர்க்க வேண்டும், த.வெ.க கட்சி கொடி ஏற்றுவது தொடர்பாகவும் , மேலும் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி கிடைக்காவிட்டால் கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவு வழங்கியிருக்கிறார்.