Madurai: நம் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இப்போது 2,500 தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளில் இரண்டு ஆண்டுக்கு மேலாக தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கும் என அச்சமடைந்துள்ளர்கள்.
அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அரசு தொடக்க நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் நியமனங்களுக்கு 2010, ஆகஸ்ட் 23ம் தேதி முதல் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயமாகும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த முறை 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தனர். தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் ஆசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வுக்கான பணிகளை தேர்வு செய்யும் முறை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த காரணத்தால் தான் 1,650 தொடக்க மற்றும் 800க்கும் மேற்பட்ட நடுநிலை பள்ளிகள் என 2,500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மட்டும் அல்லாமல் மேலும் 50 சதவீதம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்களின் எதிர்கால நிலை என்னவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.