இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகத்தில் ஒன்றுதான் அதானி குழுமம். அதானி பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி பவர் ஜார்கண்ட் லிமிடெட் (APJL) என்ற நிறுவனம் தான் பங்களாதேஷ் நாட்டுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அதானி பங்களாதேஷ்-ன் தற்காலிக அரசுக்கு சுமார் 850 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கான கால அவகாசம் நவம்பர் 7ஆம் தேதி என கூறி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 1,600 MW திறன் கொண்ட கோடா நிலக்கரி மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து, மின்சாரத்தை அதானி பவர் நிறுவனத்தின் பங்களாதேஷ் நாட்டிற்கு அளிக்கிறது. இதன் காரணமாக பங்களாதேஷ் அரசு செலுத்தப்படாத 846 மில்லயன் டாலர் நிலுவை தொகை காரணமாக அதானி பவர் நிறுவனம் ஏற்கனவே மின்சார விநியோகத்தை குறைத்துள்ளது.
பங்களாதேஷ் நாட்டில் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதால் பல பிரச்சனைகளை அந்நாட்டு வர்த்தகம் செய்து வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகிறது. மேலும் அதானி நிறுவனம் காலக்கெடுவிற்குள் பணத்தை செலுத்த தவறினால் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் (PPA) விதிமுறைகளின் படி மின் விநியோகத்தை நிறுத்துவதாக நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் பங்களாதேஷ் இன்னும் 170.03 மில்லியன் டாலர் நிலுவை தொகைக்கு லைனே ஆஃப் கிரெடிட் கடிதத்தை வழங்கவில்லை மற்றும் நிலுவை தொகையை செலுத்தவில்லை என அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.