மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

Gold News: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! இன்றைய விலை நிலவரம்!!

தங்கம் விலை கடந்த மாதம் முதல் இந்த மாதம் வரை தொடர்ந்து விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதை தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையை தாண்டியது. அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஆனால் நேற்று தங்கம் விலை ரூ.120 குறைந்து ரூ.58,840 க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் நகை எப்படி வாங்குவது என்ற பயத்தில் உள்ளார்கள்.