Gold News: தங்கத்தின் விலை சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை ரூ.1,320 அதிரடியாக சரிந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை பண்டிகை காலங்களில் விலை அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே போல தான் தீபாவளி காரணமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது மக்களுக்கு பெரும் கவலையை தந்தது. இந்த நிலையில் ஏழை மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்படி தங்கம் வாங்குவது என்று கவலையில் இருந்தார்கள்.
அந்த நிலையில் கடந்த மாதம் 16-தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.57,000-தை தாண்டி புதிய உச்சத்தை பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை குறையாமல் ஏறுமுகத்தில் இருந்து கொண்டு சென்றது. கடந்த மாதம் 19 தேதி ஒரு சவரன் ரூ.58,000 என்ற நிலையை தாண்டி விற்பனை செய்தது. அதன் பிறகு கடந்த மாதம் 30 தேதி தங்கம் விலை 59,000-த்தை கடந்து வரலாறு காந்த அளவிருக்கு புதிய உச்சம் பெற்றது. பிறகு சற்று குறைந்தது.
மீண்டும் அதே போல் நேற்றும் தங்கம் விலை உயர்ந்து ரூ.58,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,320 குறைந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மட்டும் அல்லாமல் வெள்ளியும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை அதிரடியாக சரிந்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.