கூட்டுறவு வங்கிகளில் குவியும் விவசாயிகள்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0
141
Farmers gather in cooperative banks!! Super announcement!!
Farmers gather in cooperative banks!! Super announcement!!

TN Government:தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு பயிர் கடன் மிக குறைந்த வட்டியில் வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் உணவு அளிக்கும் தொழில் என்று விவசாயத்தை கூறலாம். விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்றால் மிகையாகது. நம் நாடு செழிக்க வேண்டும் என்றால் அது விவசாயத்தால் மட்டுமே முடியும். அந்த வகையில் தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்தல், அவர்களுக்கு தேவையானவற்றை பல முறைகளில் செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மழை காலமாக இருப்பதால் விவசாயிகள் அனைவரும் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வாங்க முன்வருகிறார்கள். இதையடுத்து விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள் வாங்குவதற்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கூட்டுறவுத் துறையில் குறைந்த வட்டியில் பயிர்க்கடன் வழங்க சுமார் 16,000 கோடி  இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த பயிர் கடன்களில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும் 20 சதவீதம் பட்டியலின விவசாயிகளுக்கும் நிர்ணயம் செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது மட்டும் அல்லாமல் பயிர்க்கடன் வாங்க வங்கிகளுக்கு  நேரில் செல்ல வேண்டியிருந்தது. இப்போது கூட்டுறவு சங்கங்களில் எளிய முறையில் விண்ணப்பிக்க “கூட்டுறவு செயலி” அறிமுகமாகியிருக்கிறது.

இதில் பயிர் கடன் மட்டும் அல்லாமல் நகை கடன் மற்றும் பல்வேறு கடன்களின் விவரம் அதில் குறிப்பிட்டிருக்கும். இது மட்டும் அல்லாமல் இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வரை 8.50 லட்சம் பேருக்கு ரூ.7,700 கோடி பயிர் கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleபிரபல கோவிலுக்கு ஜி.எஸ்.டி., துறை ரூ.1.57 கோடி பாக்கி நோட்டீஸ்!!
Next articleநாம் தமிழர் கட்சியில் பிரபல பெண் நிர்வாகி விலகல் ! தொடர்ச்சியாக சீமான் மீது குற்றச்சாட்டு!!